பக்கம்:பெண்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் காட்டும் காரிகைமார் 65

எங்கோ கடவுளையும் காஞ்சியையும் பாட வந்த முனிவர் கூட, இவர்கள் விலை கூறி வாணிபம் செய்யும் கொடுமையை எழுத மறக்கவில்லையே ! அதிவீரராமர் என்ன கூறுகின்ருர் ?

விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்

அம்மம்ம எத்தகைய கொடுஞ்சொற்கள்! பெண் இனத் தில் ஒரு விலை மகள் இனம் பிரித்து, அவ்வினத்தவரைப் பரத்தையராக்கி, அவருக்கு அழகாக மேனி மினுக்குதலை யும் சொல்லிய இந்த ஆடவர் சமூகம் என்று திருந்திப் பரத்தைமை வாழ்வினைப் பாரில் இல்லையாகச் செய் யுமோ ! .

ஒளவையார் தம் காலத்தில் இந்தக் கொடுமைகளே யெல்லாம் கண்டிருக்கக் கூடும். இவ்வளவு வெளிப் படையாக அவருக்குச் சொல்ல முடியவில்லை. அவரும் பெண்தானே ? தம் இனம் பழிக்கப்படுவதில் அவருக்கு வெறுப்பு இராதா என்ன ! என்ருலும், ஒரு வேளை ஒரு சில பெண்கள் காமக் களஞ்சியங்களாய்த் தம் உடலை விற்கும் காட்சியை ஊர் பல சுற்றிய அவர் கண்டும் கேட் டும் அறிந்திருப்பார். அந்த வேகத்தில்தான் மைவிழி யார் மனையகல், என்ற சொற்கள் வந்திருக்கும். மேனி மினுக்குகின்ற அந்த மை திட்டும் பரத்தையர் வழிச் செல்லலாகாது என்பது அவர் கருத்துப் போலும்! ஆ ! என்ன கொடுமை இது !

என்ருலும், ஒளவையார் தாய்மையின் பெருமையைத் தலைமேல் வைத்துப் போற்றும் அந்தப் பெருநெறியை மறக்க முடியுமா ? பெண்மையின் தியாகத்திடையில் பிறந்து, பெண்களைத் தாயரெனப் பேணிப்போற்றும் பெருநெறி விட்டு, அவர்களைப் பரத்தையராக்கி, ‘அவரை வேண்டா என்று கூறும் அந்த நன்றியற்ற ஆடவர் சமூ கத்துக்கு அவர் அறிவுறுத்த விரும்பினர் போலும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/68&oldid=600918" இலிருந்து மீள்விக்கப்பட்டது