பக்கம்:பெண்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெண்

அதேைல உலகில் பிறந்த உயிர்களுக்குத் தாயே முதற் கடவுள் என்பதை வற்புறுத்துகின்ருர். ஒரு வேளை அவர் சொற்குப் பிறகுதான் அறிஞர்கள் வள்ளுவர்தம் 'ஆதி பகவன் ' என்ற சொற்ருெடருக்குத் தாய் தந்தையர் ’ என்ற பொருள் கண்டார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், என் பதும், தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை, என் பதும் இந்த உண்மையை வற்புறுத்துவன அல்லவோ ? எனவே, அவர் காலத்தில் வாழ்ந்த சில ஒழுக்கங்கெட்ட் பெண்களை எச்சரித்த போதிலும், அவர் தாய்மையின் பெருமையை இறையின் பெருமையினும் மேலாக வைத் துப் பேசும் அந்தப் பெருநெறி என்றென்றும் போற்றப் பட வேண்டுவதொன்ருகும்.

பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் பெருமையை அவர் பேசாது விடவில்லை. காவல்தானே பாவையர்க் கழகு, என்ற சொற்கள் எவ்வளவு அழகாகப் பெண்ணுக் குத் தற்காப்பு இன்றியமையாதது என்பதை விளக்கு கின்றன !

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் ? மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை."

என்ற திருக்குறள், எவ்வளவு குறைந்த அடியில் நிறைந்த அளவில் ஒளவையாரால் பேசப்படுகின்றது ! தனது கற்பில் குறைவு வராது காத்து, கொண்ட கணவனேப் பேணி, மனேக்கணிகலனும் மக்களைப் பெற்று, ஒல்லும் வகையான் உற்ருர்க்கும் மற்ருர்க்கும் உதவி, உலகம் வாழத் தான் வாழும் இப்பெண் இனத்திற்கு எத்தனை பெருமை ! இப் பெருமையைப் போற்ருது நாடுகள் நாக ரிகம் பேசி வருகின்றனவே! தாய்மையில் வாழும் தனிப் பெருந் தியாகத்தின் சின்னமாகிய பெண், இடைக்காலத் தில் ஓர் இயந்திரம் போன்று அல்லவா கருதப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/69&oldid=600919" இலிருந்து மீள்விக்கப்பட்டது