பக்கம்:பெண்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் காட்டும் காரிகைமார் 6.7

வந்தாள் கடமை உணர்ச்சி கொண்ட அவளை வேலைக் காரியென எண்ணி நடத்தும் கணவர் நிறைந்த கால மல்லவா அது அது மட்டுமா ? கொண்டான அன்றிப் பிறரை அறியாத பெருங் கற்பின் நெறி தவருத் தமிழ் நாட்டுப் பெண் இனத்தை உலாக்களில் வலிய அழைத்து, ஊராளுவோனைக் கண்டு உருகுவதாகக் காட்டும் இலக்கி யங்கள்தாம் நாட்டில் எத்தனே தோன்ற ஆரம்பித்து விட்டன .

ஒட்டக்கூத்தர் ஏதோ எழுதுகின்றரே! அதோ அவர் முடித்துவிட்டார் எழுத்தினை என்ன அது ! மூவர் உலாவா ! ஆம் விக்கிரமனும், குலோத்துங்க னும், இராசராசனும் தம் அரச வீதியில் பவனிவரும் காட்சியைத்தான் அவர் எழுதியிருக்கிருர். அது பற்றி எழுதினால் யாருக்கும் கவலை இல்லை. ஆனால், அந்த ஊர்ப் பெண்களேயெல்லாம் பேதை முதல் பேரிளம் பெண் ஈருகப் பலவகைப் படுத்தி அம்மன்னரைக் கண்டு கருத்தழிந்து உருத்திரிந்து விட்டதாக அன்ருே கூறுகின்ருர் பொதுவாகப் பெண்கள் இனத்தையே முதலாகச் சுட்டிக் காட்டிப் பிறகு ஒவ்வொருத்தியாகப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று வரிசையாக நிறுத்தி, வகை கெட்டு அவர்கள் வாடுவதாக அவர் குறிக்கின்ருரே! இது பெண் இனத்தை இழிவுப்படுத்துவதன்றி வேறு யாது ? அரசனது அந்தப் புரத்திலே உள்ள அரசி அரசனைக் கண்டு கருத்தழிந்தால் நாம் கவலையுற வேண்டுவதில்லை. ஆல்ை, பவனி விழாவிலே, பத்துப்பேர் இடையில், ஒரு பெண் அரசனைக் கண்டு, தன்னை மறந்து, நிலை மறந்து, கலை மறந்து, கருத்தும் மறந்து நிற்கின்ருள் இஃது என்ன, கேலிக்கூத்தா, அல்லது கெடுதற் பாட்டா ! ஏதோ இலக்கியம் இயற்ற வேண்டும் என்று நினைத்தால், அதற்கெல்லாம் பெண் இனத்தவராகிய நாங்கள்தாமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/70&oldid=600920" இலிருந்து மீள்விக்கப்பட்டது