பக்கம்:பெண்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெண்

அகப்பட்டோம் ? சங்ககாலத்தே ஒருவனும் ஒருத்தியு மாகப் பூத்த அந்த இவ்லற வாழ்வு பிற்காலத்தில் இவ் வாறு பிரிக்கப்படுவானேன்? இல்லாத பிரபந்தங்களே உண்டாக்கி, அவற்றைத் தொண்ணுற்ருறு என வகைப் படுத்தி, அவற்றை அழகுறப்பாடுவதற்காக எங்கள் பெண் இனத்தைப் பணயம் வைத்துப் பாடுவது என்ருல், அதை நாங்கள் எப்படிப் பொறுக்க முடியும் ? என்ருலும், இன்றளவும் அது போன்ற இலக்கியங்கள் வாழ்ந்துதாமே வழிகின்றன? எப்படி எப்படிப் பெண் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்ட வேண்டுமோ, அப் படியெல்லாம் சொல்லோவியம் காட்ட இந்தப் புலவர் கள் கற்றுத் தீட்டி ஏனே எங்கன் இனத்தை இழிவுப் படுத்துகின்ருர்கள் இன்றைய நாகரிக உலகில் படக் காட்சி என்று பாவையரைப் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துச் சுவரில் ஒட்டிப் பொருள் பறிக்கும் இந்த வழிக்கும், அன்று உலாவெனும் இலக்கியத்தின் சொல் லோவியத்தில் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டி யதற்கும் என்ன வேறுபாடு? அழகனுயினும் ஏறிட்டுப் பார்க்காத இல்வாழ்வுச் செல்வியர் எங்கே! நாட்டு மன்னன் உலா வருவதைக் கண்டு கருத்தழியும் காரிகை யர் எங்கே ! ஆம் ! ஒரு வேளை அவர்களைப் பரத்தையர் குலமெனக் கூறலாம், மணமாகா மங்கையர் என்னலாம். எப்படியிருந்தாலும், ஒருவனும் ஒருத்தியும் காதல் இரு வர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட அந்த இன்பத்தின் எல்லேயை இவர்கள் எட்டிப் பார்க்கவும் வழியற்றவர் களே! அதோ! அந்தக் காட்சியும் மறைகின்றது. சேக்கிழாரும், கம்பரும், ஒளவையாரும், கூத்தரும் அதோ, அகன்றுகொண்டிருக்கின்றளர். அடுத்துவரும் காலத்தே தமிழ் நாட்டு அன்னையர் எப்படி வாழ்ந்த னரோ! அதையும் பொறுத்திருந்து காண்போம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/71&oldid=600921" இலிருந்து மீள்விக்கப்பட்டது