பக்கம்:பெண்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெண்

கிறது. அரச அவையில் அரசருடன் ஒருங்கு வீற்றி ருந்து அறவுரையும் ஆய்வுரையும் கூறிய அதே பெண். இனம், அரசியற் சூழ்ச்சி ஆய்வுக்கும் பிறவற்றிற்கும் சேர்க்கப்படாத இனம் என்ற அளவில் எழுத்து வளர்ந்து விட்டது. பெண்டிரையும் அஃறிணைப்பொருள்களையும் ஒன்ருக மதிக்கும் அந்த நிலையும் நாட்டில் உண்டாகி, விட்டது. நான்காம் ஐந்தாம் நூற்றண்டுக்ளிலும் பெண் கள் வெறுக்கப்பட்டார்கள். ஆல்ை, பிற்காலத்தில் இழித்துப் பேசப்பட்ட அத்தனை கொடுமை அன்று அவர்கள் பெறவில்லையே! அம்மம்ம! எத்தனை வகையர்ன. கொடுமைகள்! எண்ணவும் மனம் நாணுகிறதே! எழு. தவும் கை கூசுகின்றதே! -

"நுண்ணறி வுடைய ராகி நூலொடு பழகி லுைம் பெண்ணறி வென்பு தெல்லாம் பேதைமைத்து என்றும். ‘. . . . . . . . . . ." - பேதைமை என்பது மாதர்க் கணிகலம்' என்றும், பேசும் அளவிற்குத் தமிழ்நாடு முன்னேறி விட்டது முன்னுள்ள அடிகள் எங்குள்ள்வை என்பதை அறியின் மிக வியப்படையத்தான் நேரிடும். திருவிளை யாடல் ஒரு கதை நூல். அது எங்கிருந்தோ, மொழி ப்ெயர்க்கப்பட்ட நூல்ாம். அதில் ஒரு பன்றி ஒரு ப்ாண்டிய மன்னைேடு போருக்குப் புறப்படுகின்ற தாம். பெண் பன்றியும் உ ட ன்பேர்கின்ற தாம். போரில் தோல்வி உண்டாகவே, நாம் திரும்பிச் செல் வோம் என்றதாம் பெண் பன்றி. அதைக் கேட்ட ஆண் பன்றி. கூறிய கூற்ரும் அவை:பெண் அறிவு பேதைமைத்து ஆதலின், நீ இவ்வாறுப்பேசிய்ை, என்று ஆண் பன்றி கூறிற்று என்று கூச்ாது எழுது கின்ருர் பரஞ்சோதியார் இல்லாத ஒன்ற்ை. எடுத் துரைத்து எங்கள்ைப்பன்றியாக்கி அங்கும்பெண்ணின்த் திற்கு அறிவில்லை என்று கூற்த்தானே இந்தக் கதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/75&oldid=600925" இலிருந்து மீள்விக்கப்பட்டது