பக்கம்:பெண்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாம் நூற்ருண்டில் பாவையர் நிலை 77

இவர் மட்டுமன்றி. இவர் மைந்தர் என்று:பேச்ப் படுகின்ற அந்த அருணகிரிநாதர்தான் என்ன சாதித்து விட்டார்? அவரும் எங்கள் பெண் இனத்தைப் பழித்துப் பேசும் கொடுமிையை எழுதவும் முடியுமோ. அவர் இளமையில் எப்படியோ இருந்து பிறகுதான் துறவிய ரார்ை என்பது கதை, ஆகவே, எப்படியோ ஆடிக்கெட்டு, பின்னே அறிவு வந்த பிறகு தம் கேட்டுக்கெல்லாம் தாமே காரணர் என்பதை மறந்து, மற்றவர்மேல் சாமர்த்திய மாகப் பழியைச் சுமத்தித் திாம் என்றென்றும் உலகில், நற்பெயரோடு வாழலாம் என்ற நினைப்பாலேதான். இப் படிப் பாடியிருப்பரோ என்றுதானே நினைக்க வேண்டி யுள்ளது. -

என்ருலும், இதுபோன்ற வாழ்வோடு தொடர்பற்ற இலக்கியங்கள் நிச்சயம் வழக்கிழந்து ஒழிவதையும் உலகம் கண்டுகொண்டுதான் இருக்கிறது. பட்டினத்தார் தம் பண்டாரப்பாட்டு இன்று எங்கே பேசப்படுகின்றது? பாவையரைப் பழிக்கும் அந்தப் பழிகாரப் பாட்டு ஏன் நாட்டில் அதிகமாக வழங்கப்படுவதில்லை ? எப்போதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், எங்கேர் மூல முடுக்குகளிலெல்லாம் பாடப்பட்ட அந்தப் பழம் பாடல் கள் இன்று நாட்டில் ஆட்சி செலுத்துவதைப் போன்று இந்தப்பாடல்கள் ஏன் இடம்பெற்று ஆட்சிசெய்வதில்லை? எந்த இலக்கியமும் மக்கள் வாழ்வேர்டு பின்யாததாகி வேறுபட்டு, ஏதோ இல்லாததையும் பொல்லாத்தையும் கற்பனை செய்துகொண்டுசெல்லுமேயானல், அந்த இலக் கியம் நிச்சயம் காலவழக்கில் அழிந்தொழிதல் ஒருதலை: உலகமும், உயிரும், ஒன்றன. இறைவனும் உண்டு என்ற உணர்வுடன் உலக இன்பம் துய்த்து, மக்களை எந்த வேறுபாடும் கருதாது மக்களாகவே மதித்துப் போற்றி வாழும் எந்த இலக்கியமும் என்றென்றும் வாழும். கடவுள் உணர்வும் சமயநெறியும் போற்றப்பட்ட அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/80&oldid=600930" இலிருந்து மீள்விக்கப்பட்டது