பக்கம்:பெண்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைப் போற்றிய அவர்பெண்மையைபழித்தார் என்ருல், அது முன்னுக்குப்பின் முரண்தானே? என்ருலும், அவ்ர் பாடிய பாடல்கள் அத்தனையும் எங்களைச் சந்தியில் இழுத்து. வைக்கத்தானே. அமைகின்றன. ? அத்தனை கொடுமை நாங்கள் அவருக்கு என்ன செய்தோம்? வழி வழியாக வரும் எங்கள் இனத்தை ஏன் அவர் இவ்வாறு பழித்துரைத்தார்? அவருடைய பாடல்களைச் சொல்லாது செல்லலாம் என்ருலும், அவருடைய கொடுமையைக் கண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. எந்தப் பெண்மையால் அவர் பெற்றெடுக்கப்பட்டு, பாலூட்டிச் சீராட்டப்பெற்று வளர்ந்து, எந்தப் பெண்மையை எண்ணி எண்ணி ஏங்கினரோ, அந்தப் பெண்மையைப் பற்றியே அவர் பேசுவதை அவர் வாக்காலேயேகேளுங் கள் ; கேட்டுச் சரிதான என்று சொல்லுங்கள். பெண்ணு கியதொரு மாயப் பிசாசம் பிடித்திட்டெனக் கண்ணுல் மயக்கி முலையால் வெருட்டிக் கடிதடத்துப் புண்ளுங்குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள்பறிக்க எண்ணு துனை மறந் தேன் இறை வாகச்சி ஏகம்பனே என்பதும்,

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப் பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் என்பதும், இன்னும் இவை போன்ற பாடல்களும் அவர் பாடியனவாக அன்ருே உள்ளன ?. ஏன் இவ்வளவு கொடுமை எங்களினத்தின்மேல்? எப்போதோ ஒரு வேளை யாரைய்ோ நினைத்துக் கூப்பிட்டு, அவள் அருகில் வாராக் காரணத்தால், பின்பு, உன்னத் தேடினவர் போய்விட்டார்,' என்று பாடி அதல்ை உண்டான ஆயா சம் தீரத்தான் இப்படிப் பழித்துரைத்தாரா எங்கள் பெண் இனத்தை ? . *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/79&oldid=600929" இலிருந்து மீள்விக்கப்பட்டது