பக்கம்:பெண்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாம் நூற்ருண்டில் பாவையர் கில 75

'நடைகு லுக்கிய முகமி னுக்கிய நகை கைத்திடு மாதரை கம்பொ னதுமெய் நம்பொ னதுமெய் நம்பொ னதுமெய் (காணுமே." என்ற அடிகளும் எவற்றை விளக்குகின்றன ? தெய்வத் தன்மை வாய்ந்த பெண்மையைப் படுபாதாளத்தில் தள்ளி வைக்கும் பாதகர்தம் வாய்ச்சொற்களல்லவா இவைகள்? கொடியரினும் கொடியவராய் ஏன் பெண்கள் ஆக்கப்பட வேண்டும் ? தோற்றம் கருதிக் கொடியர் என்றும் கொடி போன்ருர் என்றும் சங்ககாலச் சான் ருேரால் பேசப்பட்ட செல்வியர், பிற்காலத்திலே செய லில் கொடியரிற் கொடியராய்ப் பேசப்படுதல் வருந்தத் தகுவதொன்ருகும் ! இது போன்று இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள் !

பார் அனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல் ஆரும் துறத்தல் அரிதரிது!’ என்ற சிறப்பைப் பெற்றவர் ஒரு பெரியவர். இப் பெயரோடு இருவர் இருந்திருக்க வேண்டும். மும்மணிக்கோவை முதலியவற்றைப் பாடிய அந்தப் பெரியவர் எங்கே, எங்கள் இனத்தையே பழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட இந்த மனிதர் எங்கே ! தம் தாயாரிடம் தளரா அன்புடையவராம் இவர் அவர்பொருட்டு இறக்கும் வரையில் அருகே இருந்தாராம். இறந்த பிறகு வாழை மட்டைகளே அடுக்கி,

முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே பின்னை இட்ட தீ தென்னி லங்கையில் அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே."

என்று பாடிரைாம். சிதை பற்றியதாம். அது பற்றி யதோ இல்லையோ, அன்று பற்றிய பெண்கன் உள்ளத் துப் பெருந்தீ இன்றும் அணைந்தபாடில்லேயே தாய்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/78&oldid=600928" இலிருந்து மீள்விக்கப்பட்டது