பக்கம்:பெண்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெண்

யதைத் தவறி எண்ணிய இந்தத் தமிழ்ச் சமுதாயம், ஒரு குலத்தையே கள்ளுக்கும் குதுக்கும் சமமாகக் கூறு மாயின், இது வாழினும்.வீழினும் என் ! எங்கும் குறையும் குற்றமும் இருப்பது இயற்கை. அது போன்று ஒரு வேளை பெண் இனத்தில் இருமனப் பெண்டிர் ஒரு சிலர் இருந்திருப்பர். அவர்களைப் பற்றிய எண்ணம் வள்ளுவருக்கு எழுந்திருக்கும். ஆகவே அவர், இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.’ - என்று கூறிவிட்டார். ஆனால், அவர்கள் ஒரு சாதியா ராவரோ ? ஒரு சாதியில் பிறந்த எல்லோரும் அப்படிப் பட்டவர்களென்று அவர் எங்கே சொன்னர் ? இருமனப் பட்ட பெண்டிர் சில்ர் என்ருல், பலமனப்பட்ட ஆடவர் பலர் இருக்கும் நாட்டில் இதைத் தவருகக் கருதி ஒரு சமுதாயத்தினை இழிவு படுத்தும் நிலை ஏன் ஏற் பட்டது ? . -

மற்றும், பெண்கள் கொடிய விடத்தைக் காட்டிலும், வேங்கையிலும் இயமன் தூதுவரிலும் மிகக் கொடியவ ராகப் பேசப்படும கொடுமை நாட்டில் தலைவிரித்தாடிய காலத்தை எண்ணின், அஞ்சவேண்டி உள்ளது !

ஆல கால விடத்தையும் நம்பலாம்

A. ஆற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம் கோல மாமத யானையை நம்பலாம்

கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம் கால ர்ைவிடு தூதரை நம்பலாம்

கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் சேலை கட்டிய மாதரை நம்பில்ை .

தெருவில் கின்று தியங்கித் தவிப்பரே !

எனற பாடலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/77&oldid=600927" இலிருந்து மீள்விக்கப்பட்டது