பக்கம்:பெண்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாம் நூற்ருண்டில் பாவையர் நிலை 79

வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளை (உள்ளத் தண்டாமரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகஉண் டாக்கும்

-- - (வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே என்று குமரகுருபரர் கலைச்செல்வியின் திருமுன் நின்று வேண்டும்போது, தமிழர் பெண் இனத்திற்கு எவ்வளவு பெருமை தந்து போற்றுகின்றனர்!’ என்றல்லவா எண் ணத் தோன்றுகின்றது ? வாழ்வுக்குத் தேவையான பொருள்களிலெல்லாம் பெண் தன்மையினைக் கண்டு அப்பெண் தன்மையினைப் போற்றும் முறையில் தமிழ் நாட்டுப் பெண்களுக்கே பெரிய ஏற்றம் தருகின்றவர்கள்.' அந்நாட்டு மக்கள் என்றுதானே அயலவர் எண்ணுவர் ! ஆனால், அதே வேளையில் அந்தப் பட்டினத்தார் பாடல் களே நினைத்தால்.........! - -

மற்றும், கால வேகத்தில் எத்தனையோ இலக்கண நூல்கள் உண்டாகின்றன. இலக்கணத்திற்கெல்லாம் இலக்கியம் கற்பிக்க முற்படுகின்ருர்கள் புலவர்கள். அந்த இலக்கியமெல்லால் அழகும் செறிவும் அமைந்தனவாகக் காணவேண்டுமென்பது அவர் தம் அவா! அதற்காகவும் இந்தப் பெண்ணினந்தான் முன்வந்து நிற்கின்றது. பெண்ணே யார் வேண்டுமானலும், எந்த வகையிலான லும் பேசலாம் எழுதலாம் என்ற வரையறை யில்லாக் காலமாகத்தான் அது இருக்க வேண்டும். இல்லையேல், இப்படி எடுத்ததற்கெல்லாம் பெண்ணைப் பற்றிப் பாடி உதாரணம் காட்ட வருவார்களா ? தண்டியலங்காரம் காலத்தால் பிந்திய ஒரு நூல். தொல்காப்பியம் உவமம் என்னும் ஒரே அணியைக்கூற, அதைத் தம் மனம்போன வகையில் பெருக்கிக் கொண்டு, அலங்கார சாத்திர மாக்கினர் பின் வந்தவர். அந்த அலங்காரங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/82&oldid=600932" இலிருந்து மீள்விக்கப்பட்டது