பக்கம்:பெண்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெண்

பெண்மையைப் பேசி, மாட்டினை விற்பது போல விலக்கு விற்கும் கொடிய வழக்கம் இங்குக் குடியேறியதைக் காண. யார்தான் வருந்தாதிருக்க முடியும்! அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்று பெண்களே தங்களைத் தாழ்த்திக்கொள்ளும் அளவுக்குத் தாழ்ந்த மனப்பான்மை நாட்டில் தலைவிரித் தாடுகிறதே! பெண் கள் தங்களையே இப்படித் தாழ்த்திக்கொள்ளும் ஒரு கயமை வேறு எங்கேனும் காணக்கூடிய ஒன்ருே ?

எங்கோ தமிழ் நாட்டு முலை முடுக்குக்களில் இரண் டொரு பெண்மணிகள் வீரப்பெண்களாயும், வெற்றிச் செல்வியராயும் விளங்கியிருந்தார்கள் என்பதும், அன்று வந்த கும்பினி ஆட்சியை ஒட்டும் வகையில் உணர்ச்சி யாளராய் இருந்தனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாயினும், பொதுவாகத் தமிழ் நாட்டுப் பெண் இனம் பெட்டிப்பாம்பென அடக்கப்பட்ட இனமாகி விட்டது என்பது உண்மைதானே ? அவர்தம் உரிமை வாழ்வு முடிந்து எத்தனையோ நூற்ருண்டுகளாயினும், அந்த அடிமை வாழ்வின் உச்சநிலையில் அவர்கள் சென்ற நூற்றண்டின் இறுதியில்-ஏன் இந்த நூற்றண்டின் தொடக்கத்தில்-வாழ்ந்தார்கள் என்பதை யார் மறுக்க முடியும்? வையத்தை வாழ வைக்க வந்த தமிழ் நாட்டுப் பெண்ணினம், இத்தகைய இருட்டுலகில் தள்ளப்பட் டிருப்பதை நீக்க வழி இல்லையா? உரிமைச் சூரியன் என்று தோன்றுவான்' என ஏங்கித் தவிக்கும் அந்த மகளிர் குரல் காதில் விழுகின்றது. அவர்தம் வாட்டமும் வருத்தமும் போக்கக் கூடிய ஒரு புத்துலகம் காண வேண்டும் என்ற எண்ணம் நாட்டில் தோன்ற வேண்டும். தோன்றுமா ? ... "

ஆ! அதோ தோன்றுகின்றதே ஓர் உதய சூரியன் 1. பேரொளியோடு-சீர்திருத்த நல்லொளியோடு-பெண்மை இனத்தை வாழவைக்கும் பிழம்பென அதோ தோன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/89&oldid=600939" இலிருந்து மீள்விக்கப்பட்டது