பக்கம்:பெண்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்ருண்டின் தொடக்கம் 87

கின்றதே! அந்த உருவம் யாது? யாருடைய ஒளி உருவம் அது ? ஆகா!'பாரதியர்ரல்லவர் அவர் ? ஆம். அவரே தான். சரி; 'விடிவெள்ளி - அன்றன்று-இளஞாயிறு தோன்றிற்று! இனி அஞ்ச வேண்டுவதில்லை! என்று பேசும் பெண்டிர்தம் ஒலி இதோ கேட்கின்றதே!. ஆகா s வீழ்ந்த பெண்ணினத்தை வீறுகொண்டெழச் செய்த பெருமை இந்த நூற்றண்டின் தொடக்கத்தே வாழ்ந்த பாரதியாருக்குத்தானே. உண்டு? உலகெல்லாம் உள்ள பெண்கள் இனத்தையும், இங்கு உள்ள பெண்கள் இனத்தையும், தமிழ் நாட்டுப்பெண்கள் பிற நாடுகளுக்கு ஓடிக் கூலி என வாழ்வு நடத்துவதையும் கண்டு கண்டு அவர் உள்ளம் கசிகின்றதே! உலகெலாம் வாழ வேண்டும் என்ற உயரிய கேர்க்கம் கொண்டுள்ள அந்த உணர் வாளரின் வாயிலிருந்துதான் எத்தனை வெடிகள்-சொற் களாக வெடித்து - வெளி வருகின்றன ! தமிழ் நாட்டுத் தாழ்ந்த பெண்மை இனம் எப்படி அவரை உணர்வு குலையச் செய்கிறது! அவர் தமது ஆடவர் சமுதாயம் பல ஆண்டுகளாகத் தமிழ் நாட்டுப் பெண் சமூகத்துக்குச் செய்து வந்த அத்தனைக் கொடுமைகளையும், வஞ்சனே களையும் தாம் ஒருவரே கழுவாயாக நின்று, கருத்தமைந்த கவி பாடி, அக்கவி வழி நாட்டைத் திருத்த முன்னின்ற நன்மையால் துடைத்துவிட்டாரே! பெண்கள் பேச வழி யற்று, வாய் மூடி மெளனிகளாகி மடிந்த அந்த நிலையிலே, அவரது உணர்வுச் சொற்களே அவர்கள் உறக்கத்தையும் சோர்வையும் போக்கின. ஆகா! தமிழ் நாட்டுப் பெண்மை வாழ அவர் என்னென்ன வழி வகுக்கின்ருர் மானம் கெட்ட ஆடவர் சமூகத்தை நோக்கி அவர் கூறும் அறவுரைகள் எவ்வளவு ஏற்ற முடையன !

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்.!"

என்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/90&oldid=600940" இலிருந்து மீள்விக்கப்பட்டது