பக்கம்:பெண்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பெண்,

காட்டவில்லையா ! எத்தனை மாறுபாடு ! காயமே பொய். காதலே கொடுமை. மாதரே பேய், என்று இடைக் காலத்தில் பேசிய அந்தத் தமிழ் நாட்டில்தானே இந்தக் கவிஞரும் தோன்றினர் ? என் அருமைத் தமிழ் நாடே 1. உன்னிடந்தான் எத்தனை மாறுபாடு ! நல்ல தலைவர்களே யும் அறிஞர்களையும் கொண்ட நீ, ஏன் புல்லர்களையும் புல்லுருவிகளையும் தாங்குகிருயோ? எனக்குத் தெரிய வில்லையே! காதலே தலைமை இன்பமென்றும், அதுவே கவலே தீர்க்கும் மருந்தென்றும் கூறும் பாரதியார் எங்கே, பெண் கொள்ளலாகாதே ' என்று பேசிய அந்தப் பொல்லா மொழியார் எங்கே!

பாரதியாரின் வாழ்நாளில் காதலிலே பகட்டான வாழ்வும் பிற மேட்ைடு நாகரிகங்களும் நம் நாட்டில் புகுந்து விட்டனவே. எழுமையும் பிரியாத இன்பக் காதல் வாழ்வில் தமிழ் நாடு இயங்குகிறது. இம்மைப் பிறப்பில் பிரியல்ம், என்ற தலைவனை நோக்கி, மறுமை யிற் பிரிவீரோ ? என்ற குறிப்புடன் நோக்கிக் கண்ணிர் விட்ட காரிகையார் வாழ்ந்த ஒரு காதல் பிணைப்பால் கட்டுண்ட நாடன்ருே அருமைத் தமிழ் நாடு? இந்நாட்டில் கண்டதும் காதலும் நின்றதும் விவாக ரத்தும் செய்து கொள்ளும் மேலை நாட்டுப் பொல்லா நிகழ்ச்சி புக வேண்டுமென நினைத்தால், யார்தான் உருப்படுவர் ? காதல் கடையில் வாங்கும் கைச்சரக்கா? கண்டவ ரோடு கைகோத்துத் திரியும் காட்டு மிராண்டிக் கூட்டத் தில் தமிழ் நாட்டுப் பெண்மை என்றும் சேராதே ! ஒருவன் ஒருத்தி என்ற வாழ்விலேதானே அவளது பெருங் தன்மையும் பெருமையும் பிணைந்துகின்றன? அந்த வாழ் வெல்லாம் பாரதியர்ரின் கண்முன் தெரிகின்றது போலும்! மேலே நாட்டு அநாகரிகமும் அவர் கண்முன் காட்சி யளிக்கின்றது. அந்தக் கொடுமையில் அருமைத் தமிழ் நாட்டுப் பெண்ணினம் அழியலாகாது என்று அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/93&oldid=600943" இலிருந்து மீள்விக்கப்பட்டது