பக்கம்:பெண்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றண்டின் தொடக்கம் 91

எண்ணுகின்ருர். எண்ணத்தின் வழிப் பாட்டுப் புறப் படுகின்றது : -

காதலிலே விடுதலையென் ருங்கோர் கொள்கை கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில் மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்

மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னேர் ; பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே

பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்து விட்டால் வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று

வேருெருவன் தனைக்கூட வேண்டு மென்பார்.'

வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் !

விடுதலையாம் காதலெனில் பொய்ம்மைக் காதல் ; சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது

சுவைமிக்க பெண்மைநலம் உண்ணுகின்ருர் : காரணந்தான் யாதெனிலோ, ஆண்க ளெல்லாம் களவின்பம் விரும்புகின்ருர்; கற்பே ம்ேலென் lரமின்றி எப்போதும் உபதே சங்கள்

எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!

என்ற பாடல்கள் அவை. இப்பாடல்களில் பாரதியாரின் உள்ளம் எவ்வளவு நன்ருக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது ! புதுமைப் பெண்ணை வாழ்விக்க வந்த பாரதியார் இன்னும் சில நாள் வாழ்ந்திருப்பாராயின், எத்தனை எத்தனை மாறுதல் காண விழைந்திருப்பார்! பண்டைச் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்மையின் பெருமையை மீண்டும் மண்ணில் நிலை நிறுத்த அவர் செய்த முயற்சி பயன்தரத் தொடங்கிவிட்டதே ! முழு வெற்றி பெருவிட்டாலும், இன்று பெற்ற-பெற்று வரும் --இந்தப் பெண்மையின் வெற்றிக்கும் சிறப்புக்கும். அந்தப் பாரதியார்தானே.விதை துர்வினர்? என்றென் றும் பெண்ம்ை அவருக்கு நன்றி. செலுத்தக் கடமைப் பட்டுள்ளதன்ருே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/94&oldid=600944" இலிருந்து மீள்விக்கப்பட்டது