பக்கம்:பெண்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை 95

அதற்குரிய நிலையில் உயர்ந்துள்ளதா என்று பார்த்தால், இல்லை என்றே சொல்லிவிடலாம். ஏதோ இரண்டொரு துறையில் பிறநாடுகளிலும் சற்று முன்னேறி இருக்கிறது என்று எண்ணலாமே தவிர, அதற்குரிய முழுப் பொருப் பும் பெண்ணினத்துக்கு அளிக்கப்படவில்லை என்பது உறுதி. கைத்தொழிற் பெருக்கத்துக்குப் பேர்போன அந்த நாட்டிலே பணியாற்றுபவரில் நூற்றுக்கு முப்ப துக்குக் குறைவான பெண்களே இன்று வேலை செய்கின் ருர்களாம். போர்க்காலத்தே பலர் அதிகமாகச் சேர்க்கப் பட்டிருக்கலாம். பொறியாளர்களாகவும் பிற பணியாளர் களாகவும் போர்க்காலத்தில் பலர் சேர்க்கப்பட்டதாக அந்த நாட்டுக் கணக்குச் சான்று தருகின்றது. பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சி கிலேயங்களிலும்கூட ஆடவர்

பெண்களின் எண்ணிக்கையிலும் மேம்பட்டுத்தானே இருக்கிறர்கள். உலக எண்ணிக்கையில் ஆடவரினும் பெண்கள் எண்ணிக்கை அதிகம் என்று கணக்குத் தருகிறர்கள். ஆல்ை, வாழ்க்கை முறையிலோ, அலு வலங்களிலோ, ஆராய்ச்சிக் கூடங்களிலோ, பிறவருவாய் தரும் துறைகளிலோ பெண்கள் நூற்றுக்கு ஒருவர் இருவர் என்றுகூடக் காணமுடியாத நிலைதானே உல கெங்கனும் காண்கின்ருேம் ! அவற்றிற்கெல்லாம் அடிப் படையாகிய கல்வியே பெண்களுக்கு நேரிய முறையில் தரப்படுவதில்லையே! அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு?’ என்ற கொள்கை இன்னும் தமிழ் நாட்டு மூல முடுக்குக்களிலெல்லாம் இருந்துதானே வருகின்றது! ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னே அரசாங்கம் எடுத்த கணக்கின்படி பார்த்தால், பெண்கள் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளார்கள் என்பது புலப்படும். : A

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/98&oldid=600948" இலிருந்து மீள்விக்கப்பட்டது