பக்கம்:பெண்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. பெண்

பல மேலே நாடுகளில் கறுப்புப் பெண்களை மணந்து கொள்ள வெள்ளையரை அனுமதிப்பதில்ல்ை. காதல் நிறத் தால் தடை செய்யப்படுவதுதான் இந்த இருபதாம் நூற். ருண்டில் காணப்படும் எழிலார் நாகரிகம். ஆங்கில நாம் டிலும் அத்தகைய கிலேயேதான், கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக நம்மை ஆண்டுவந்த நாகரிக நாடாகிய இங் கிலாந்து, நாட்டுப் பாராளு மன்றத்தே 640 உறுப்பி னரில் 24 பேர்தான் பெண்களாம். சில இடங்களில் மண. மான பெண்கள் அலுவலகங்களில் பணிபுரியத் தடைச் சட்டங்கள் சென்ற சில ஆண்டுகளுக்கு, முன் வரையில் இருந்தனவாம். ஆங்கில நாட்டிலேகூடப், பணியாளர் கூலித் துறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு பாடாம். .

இன்னும் சில நாடுகளில் பெண்கள் நடத்தப்படும் நிலை மிகவும் வேடிக்கையாகவும், கேவலமாகவும் இருக் கிறது. சில நாடுகளில் மணமான பெண்கள், தங்கள் பொருள் பற்றியோ, வேறு உரிமை பற்றியோ வழக் காடவோ, அன்றி வேறு செயலாற்றவோ அவர்தம் கண வன்மார் உத்தரவு இன்றிச் செல்லலாகாதாம். தமக் கெனவே சொந்தமான பொருள்களைக்கூடக் கணவர் உத்திரவின்றிச் செலவிடவோ சேர்த்து, வைக்கவோ உரிமை பெருத பெண்கள் வாழ்கின்றர்களாம். இரண். டொரு நாடுகளில் நூற்றுக்கு இரண்டொருவரே படித்த பெண்டிர் இருக்கின்றனர். எங்கே ஒரு நாட்டிலேதான் - ஜப்பாகை இருக்கலாம்- ஆண்க்ள்விடப் பெண்கள் அதிகமாகப் படித்திருக்கிருர்கள். சில அரசாங்கங்களில் பரத்தைமையைப் போற்றி வளர்க்கும் கோரக் காட்சியும் இதை நாகரிக உலகில் நடந்துகொண்டுதான் வருகிறது. ஏன், எல்லாவற்றிலும் முன்னேற்றமடைந்த எந்த வேறுபாடும் எங்களுக்கிடையில் இல்லை, என்று.பேசும் அந்த ரஷ்ய நாட்டிலேதான் என்ன? பெண்கள் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/97&oldid=600947" இலிருந்து மீள்விக்கப்பட்டது