பக்கம்:பெண்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை 93

பதவியில் இருந்தார். அமெரிக்காவிலுள்ள இந்தியத் துTது வரும் ஒரு பெண்மணிதான். இவையெல்லாம் மகிழ்ச்சிக் குரியனவே! என்ருலும், இன்னும் போதிய அளவு பெண் ணினம் முன்னேறவில்லை என்றுதான் எண்ணுகிறேன். அதுவும் நம் நாட்டுப் பெண்கள் நிலை எத்தனையோ வகையில் தாழ்ந்துதான் உள்ளது !

உலகத்தே நாகரிகம் மிகுந்துள்ள நாடுகள் என்று பேசும் அந்தப் பெரு நாடுகளில் கூட ஒன்றும் பெண்கள் இனம் உயர்ந்ததாகக் காணவில்லை. பெண்களின் எண் ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று பேசும் கணக்குப்படி, ஆட்சியிலும் பிற அலுவல் களிலும் எந்த காட்டிலும் பெண்கள். முன்னேறவில்லை. அமெரிக்காத் தொடங்கி இங்கு நம் நாடு வரை எந்த நாட்டிலே பார்த்தாலும் நூற்றுக்கு இரண்டொரு பெண் கள் தாமே சற்று உயர்ந்தவர்களாகக் காணப்படுகிருர் கள்! நம் நாட்டில் ஆயிரத்துக்கு ஒன்று என்று கூடச் சொல்லலாம். ஆனால், தலைவர்கள் மட்டும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று பேசுவதில் தவறுவதில்லை.

ஏதோ கிடைத்த சில புள்ளி விவரங்களைக்கொண் டு பார்ப்போம்: அமெரிக்காவில் (U. S. A.) பாராளுமன் றத்தே 435 உறுப்பினரில் 9 பெண்களே இருக்கின்ருர் களாம். அந்த நாட்டிலுள்ள ஆண் பெண் ஊழியர்களுக்கு உழைப்பில் வேறுபடுத்தி ஊதியமும் வேறு வகையாகத் தான் கொடுக்கிருர்களாம் ! அந்த நாட்டில் கறுப்புப் பெண்களுக்கென ஒரு நீதி, மற்றவர்களுக்கென வேறு நீதியாம்! போர்க்காலத்தே அவருள் நூற்றுக்கு எண்மர் தான் வேலைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டார்களாம். பிறகு அவர்களும் தள்ளப்பட்டார்களாம். ஆண்களுக்கு நூறு என்ருல், பெண்களுக்கு அறுபத்தைந்துதான் கூலிக் கணக்காம்.

  • 1955-ல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/96&oldid=600946" இலிருந்து மீள்விக்கப்பட்டது