உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பெரியார் ஒரு (புது உலகம்) வரலாற்றுப் படைப்பாளர்! சுயமரியாதை இயக்கம் - உலக மக்கள் யாவரும் மகிழ்ச்சி பொங்க சகோதர உணர்வுடன் - ஏற்ற தாழ்வகற்றி -சமவாய்ப்பு, சம நுகர்ச்சியுடன் -இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதே பெரியாரின் கொள்கை - குறிக்கோள். இதற்குக் குறுக்கே நிற்கும் எந்தத் தடைகளையும் அகற்றவேண்டும் என்பதே அவரின் அணுகுமுறை. அவர் கண்ட இயக்கம் சுயமரியாதை அவ்வியக்கத்தின் நோக்கங்களாக அவர் அறிவித்தவை: இயக்கம். "மக்களுக்கு உயிரை விட மானம் பெரிதென்பது அதன் முதலாவது கொள்கை. எல்லோரும் பிறவியில் சமம் என்பது இரண்டாவது கொள்கை. பெண்களுக்குச் சமவுரிமை இருக்க வேண்டுமென்பது மூன்றாவது கொள்கை. ஜாதி மத பேதங்கள் தொலையுமட்டும் நாட்டின் ஒற்றுமையையும் எல்லோருடைய நன்மையையும் உத்தேசித்து ஒவ்வொரு ஜாதிமதத்திற்கும் அரசியலில் சரியான பிரதிநிதித்துவம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கண்மூடி வழக்கங்களும் மூட நம்பிக்கையும் தொலைய வேண்டும். நேரம், சாஸ்திரம், புராணம், பழக்கம் என்னும் காரணங்களால் மனிதனின் பகுத்தறிவைக் கட்டுப்படுத்தக் கூடிய பார்ப்பனீயம் ஒழிந்து சுயேச்சையும் அறிவும் வளர வேண்டும்". ('குடிஅரசு' - 27.5.1928)