இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3 கி.வீரமணி தமிழினம் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் வருண கொள்கைக்கு ஆட்பட்டு சாதிகளாகச் சிதறுண்டு போயின. இனப்பெயர் மறைந்து தமிழன் தனித்தனி சாதிப் பெயர்களுக்கு ஆளாகித் துண்டுதுண்டாகிப் போய்விட்டான். இந்த நிலையில்தான் தந்தை பெரியார் அவர்கள் தமிழர்கள் ஓரினம் என்பதை உணர்ந்துகொள்ளவும், ஆரியத்தால் இழிவுபடுத்தப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டுத் தன்மானம் பெறவும் இனத்தின் பெயரால் ஓர் இயக்கம் கண்டார்.