உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அறிவும் பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியில் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு 'யோக்கியதை' இருக்கிறதோ இல்லையோ, இந்நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத்தவிர, வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவை அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன். சுயமரியாதை இயக்கம் என்று தந்தை பெரியார் அவர்கள் ஏன் பெயர் சூட்டினார்? அதுவே அவர் துவக்கிய பண்பாட்டுப் புரட்சிக்கான கால்கோள் விழா - "திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும் அறிவு பெறவே," சமத்துவம் அற்ற நிலை போக்கிடவே பிறந்த பகுத்தறிவு இயக்கமே சுயமரியாதை இயக்கம்! அவ்வியக்கத்திற்கு மனிதநேயமே அடிப்படையாகும் - ஏன் அப்படி பெயர் வைத்தார் என்பதற்கு அவர்கள் கூறும் விளக்கம் இதோ! சுயமரியாதை இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஒரு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும், அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய 'சுயமரியாதை' என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவே உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டு பிடிக்க முடியாது" ('குடிஅரசு'- 1.6.1930) என்று கூறுகிறார் தந்தை பெரியார். .