உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I. பண்பாட்டுப் புரட்சி படையெடுப்பால் தமிழ் இனம் பண்பாட்டுப் அடிமைப்பட்டுக் கிடந்தது. முகவரி இன்றி தவித்தது. 1976-17-ஆம் ஆண்டுகளிலே உதயமான இயக்கத்தினை பார்ப்பனரல்லாதார் இயக்கம் (Non Brahmin Movement) என்று எதிர்மறைப் பெயரில் அழைத்தனர். இதைக் கண்டு குமுறியவர் தந்தை பெரியார். அதற்கு மாற்றாகத் 'திராவிடர்' என்ற வரலாற்று முகவரியை, மூதறிஞர்களும் மறுக்க இயலாவண்ணம் தந்தார் பெரியார்! அந்தப் பண்பாட்டுப் புரட்சியின் துவக்கமே, அடையாளம் இல்லாத இனம் என்ற அவலத்தைப் போக்கிற்று. இந்த இனத்தைப் போற்றினார். உலக நாகரீக வரலாற்றில் மூத்தகுடி, முதற்குடிமக்களாகிய திராவிடரின் இன்றைய நிலை என்ன? பெரியார் பெரிதும் கவலை கொண்டார். இவருக்கு முன்னர்த் தோன்றிய "ஜீவாத்மாக்களும், பரமாத்மாக்களும், மகாத்மாக்களும்" அடுத்த உலகத்தைப் பற்றியே சிந்தித்தனர், பேசினர், ஆசை காட்டினர், அதற்கு 'வழி' கூறினர். தந்தை பெரியார்தம் முறையோ, இந்த உலகத்தையும் இனி வரப்போகும் அறிவியல் சார்ந்த புதுமை உலகத்தையும் பற்றியே சிந்தித்த புதிய முறையாகும். தான் சிந்தித்தால் போதாது என்று கருதித், தன் மக்களையும் சிந்திக்க வைக்க அரும்பாடு பட்டார்? , அந்தத் 'தகுதி' அவருக்கு எப்படி உள்ளது என்பதற்கு அவர்கள் கூறும் விளக்கம்: அடக்கமும் ஆழமும் நிறைந்த ஒன்றாகும்! et "ஈ.வெ. ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும்