6 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி மதிக்கப்படுகிறார்கள். பழந்தமிழர்கள் பறையர், பள்ளர், சக்கிலியர், சண்டாளர்களாக இருக்கிறார்கள். - இப்படி நூற்றுக்கணக்கான ஜாதியாய்த் தமிழர்கள் பிரிந்து ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக்கொண்டி ருக்கிறார்கள். அதனாலேயே அய்ரோப்பியனுக்கோ ஆரியனுக்கோ - முஸ்லிமுக்கோ இருக்கும் சமுதாயப்பற்றும், ஒற்றுமையும் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லை. இதை எல்லாம் தமிழர்கள் இன்று சிந்திக்க வேண்டாமா?” என்று கேட்கிறார் தந்தை பெரியார். ( "தமிழர் தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு" - 11.1.1942- இல் தந்தை பெரியார் ஆற்றிய உரை) சாதி ஒழிப்புக் கொள்கை சாதி ஒழிய வேண்டும் என்பதைத் தமது வாழ்நாள் இலட்சியமாகவும், அதற்கான அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தமது பணியாகவும் கொண்ட தந்தை பெரியார் அவர்களின் கருத்து உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளும் வகையில், அது ஒழிக்கப்பட வேண்டியது அவசர அவசியம் என்ற குரல் ஓங்கி வருவது, தந்தை பெரியார் அவர்கள் துவக்கிவைத்த பணி தொய்வின்றித் தொடரவே செய்யும் என்பதற்குச் சில முக்கிய ஆதாரங்கள் உள்ளன. ஆசிய நாட்டின் வளர்ச்சிபற்றி ஆய்வு செய்த சுவீடன் நாட்டுப் பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான குன்னர் மிர்தால் (Gunnar Myrdal) அவர்கள் ‘Asian Drama' என்ற பெயரில் அவரது ஆய்வை ஒரு நூலாக எழுதினார். 'இந்தியப் பாரம்பரியத்தில் ஜாதி என்பது மிகமிக ஆழமானதும் மிகக் கடுமையானதுமாகும். அறுவை மருத்துவத்தால் மட்டுமே அதனை அடியோடு அழிக்க முடியும். இதற்கான உள்ளார்ந்த அக்கறையுடைய அரசியல் அழுத்தமெதுவும் அங்குக் கிடையாது." அதில் அவர், "Caste is so deeply entrenched in India's tradition that it cannot be eradicated except by drastic surgery and for this,
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/13
Appearance