கி.வீரமணி there has been no serious political pressure" (page 278) எனக் குறிப்பிட்டுள்ளார். 7 தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளாக சாதி ஒழிப்புப் பற்றிக் கூறிவரும் கருத்து இதுவே. தன்னை ஒரு சமுதாய அறுவைச் சிகிச்சை மருத்துவர் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியதோடு, மருத்துவமுறையில் உள்ள Physician's Cure என்ற வெறும் மருந்துமூலம் குணப்படுத்த முடியாத நோய் இது: Suregeon's Cure என்ற அறுவைச் சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றார். குன்னர் மிர்தாலுக்கு அவரது பொருளாதார ஆய்வுக் கருத்துக்களுக்காக நோபல் பரிசு கிடைத்தது. தந்தை பெரியார் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்காமலிருக்கலாம்; ஆனால் அவரது கருத்து நோபல் பரிசைப் பெற்றிருக்கிறது என்று நாம் மகிழ வேண்டும். அவரது பண்பாட்டுப் புரட்சியின் எதிரொலி உலக மாமன்றங்களில் எல்லாம் கேட்கத் துவங்கிவிட்டன! 1999-இல் மும்பை நகரத்தில் !HEU (International Humanist and Ethical Union) என்ற பன்னாட்டு மனிதநேயர்கள் அமைப்பு கூட்டிய நான்கு நாள் மாநாட்டில் அதன் உறுப்பினர் என்ற முறையில் பெரியார் தொண்டர்களும், திராவிடர்கழகத்தினரும் கலந்துகொண்டபோது அது முன் வைக்கப்பட்ட தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவில் சமூக மாற்றம், முன்னேற்றம் ஏற்படவேண்டுமெனில், சாதி ஒழிப்புப்பற்றிய வேலைத்திட்டம் வேண்டும். இதை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று பரிகாரம் தேடிட முனையவேண்டும். இக்கருத்து, அண்மையில் ஜெனீவா மாநாட்டில் ஏற்கப்பட்டுள்ளமை பெரியார் செய்த பண்பாட்டுப் புரட்சியின் நல்ல விளைவுகளில் ஒன்றல்லவா? தமிழர்களிடத்தில் இல்லாத சாதி ஆரிய நுழைவால் வந்து சேர்ந்தது. சாதி ஒழிப்பு மனித உரிமைக்கும், நேயத்துக்கும் எதிரானது. தமிழர் ஒற்றுமையையும் சிதைக்கக்கூடியது.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/14
Appearance