உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

00 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி அதனால்தான் சாதி ஒழிப்பை உயிர் மூச்சுக் கொள்கையாகக் கொண்டார் பெரியார். "வருணாசிரமத்தின் மூலம்தான் தீண்டாமை அமலில் இருக்கிறது. வருணாசிரமம் இல்லையானால் தீண்டாமை பரவ, நிலைபெற இடமில்லை" என்றார் ('குடிஅரசு' -7.8.1929) தந்தை பெரியார் இறுதியாக நடத்திய "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்" (8,9.12.1973) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: "இந்திய அரசியல் சட்டத்தில் 17-ஆவது விதியில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதற்குப் பதிலாக ஜாதி (Caste) என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். சாதி ஒழிப்புத் திருமணங்களை ஏராளமாக நடத்தினார்கள். கழக இளைஞர்கள் கட்டளைத் திருமணமாக ஏற்றுச் செயல்படுத்தியும் காட்டினார்கள் செயல்படுத்தியும் வருகிறார்கள். 1929-இல் செங்கற்பட்டில் நடத்தப்பட்ட முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதிப் பட்டத்தைத் துறப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த மாநாட்டிலேயே சாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்தார்கள் சுயமரியாதை வீரர்கள். இன்றைக்கு பெயர்களுக்குப்பின் சாதிப் பட்டம் தமிழ்நாட்டில் அருகிவிட்டதா -இல்லையா? தூ இது தந்தை பெரியார் கொளுத்திய பண்பாட்டுப் புரட்சிக்கான அடையாளமாகும். தந்தை பெரியார் இயக்கத்தைத் துவக்கிய அந்தக் கால கட்த்தில் தமிழ்நாட்டின் நிலை என்ன? சென்னை ஜார்ஜ் டவுனிலும், மவுண்ட் ரோட்டிலும் பஞ்சமர்களும், நாய்களும், பெரு வியாதியஸ்தர்களும்