உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி பிரவேசிக்கக்கூடாது (உணவு விடுதிகளில்). ('குடிஅரசு' 25.5.1936) என்று எழுதிவைத்தார்கள். 1935-இல் கும்பகோணம் நகராட்சியில் "அக்கிரகாரத்துக்கு கக்கூஸ் எடுக்கத் தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது- அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும்" என்று தீர்மானம் போடப்பட்டது. ('குடிஅரசு' 6.10.1935) 1901 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சென்னை மாகாணம் பிராமணர்கள் 34%, சூத்திரர்கள் 943% என்றுதானே இருந்தது? அரசு ஊழியர்கள் சூத்திரர்கள் என்று 1927 வரை பதியப்பட்ட அவலநிலைதானே இருந்தது ? - 1927 அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்ட பார்ப்பனரல்லாத இளைஞர் சங்கத்தின் முதல் மாநாட்டில்தானே இதனை நீக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? அம்மாநாட்டில் தந்தை பெரியார், பனகல் அரசர், டாக்டர் ஏ. இராமசாமி முதலியார், ஜே.எஸ். கண்ணப்பர் முதலியோர் பங்குகொண்டனர். இந்த வரலாறெல்லாம் நம் இளைஞர்களுக்குத் தெரிவிக்கப்படுவது அவசியமாகும். 'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொள்!' என்ற அந்த முழக்கம் ஆதிக்கபுரியினரைப் பணிய வைத்தது! வட இந்தியாவைப் பொறுத்தவரையில் நிலைமை இன்னும் மோசமாகும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் காசியில் முன்னாள் உத்தரப்பிரதேச முதலைமைச்சர் டாக்டர் சம்பூர்ணானந்த் அவர்களின் உருவச்சிலையைத் திறந்து வைத்தார். உயர் சாதி (காயஸ்தா) சிலையைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் திறந்ததால் சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறிக் காசி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உயர் சாதி மாணவர்கள் கங்கை தண்ணீரைக் கொண்டுவந்து சிலையைக் கழுவித் தீட்டுக் கழித்தனர் என்றால், எவ்வளவு பெரிய அநீதி! இவ்வளவுக்கும் பாபு ஜெகஜீவன்ராம் படித்தவர் - பணக்காரர்- பெரிய பதவியிலும் இருந்தவர். எந்த நிலையில் இருந்தாலும் 9