10 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி பிறப்பு எதுவோ அதுவேதான் ஒரு மனிதனின் தகுதியை நிர்ணயிப்பது என்பது நியாயமாகுமா? அந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் சென்னை வந்த பாபு ஜெகஜீவன்ராம் ஆத்திரம் பொங்க உணர்ச்சி எரிமலையாக வெடித்தார்! மராட்டிய மாநிலத்தில் நாக்பூரில் பாபுலால் பாரத்தே என்ற தாழ்த்தப்பட்ட தோழர் சாய்பாபா கோயில் ஒன்றைக் கட்டிட 50,000 ரூபாய் நன்கொடை அளித்தார். கோயில் செலவுகளுக்கு என்று மேலும் 5,000 ரூபாய் அளித்த அவரை, கோயிலுக்குள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லையே! உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தீர்ப்பை இப்பொழுது வழங்கி இருக்கிறது. காலத்தின் நிர்ப்பந்தம் நீதித்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை! தமிழ்நாட்டில் காந்தி காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது நடைபெற்ற ஒரு முக்கிய சம்பவம்பற்றிய ஒரு குறிப்பு மிக முக்கியமானது. தேசப்பிதா என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர், சாதியில் வைசியர் என்பதால்தானே 1927-க்குமுன், சென்னையில் அவரை விருந்தினராக வரவேற்ற திரு. சீனுவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில் அவர் அமர்த்தப்பட்டார். அவருக்கோ அவரது துணைவியார் அன்னை கஸ்தூரிபாய்க்கோ சீனுவாச அய்யங்கார் வீட்டு அடுப்பங்கரை வரையில் செல்ல இயலவில்லை; ஆனால் சுயமரியாதை இயக்கம் 1925-26-இல் பிறந்து வளர்ந்தபிறகு நிலைமை மாறுகிறது. 'தமிழ்நாட்டில் காந்தி' (பக்கம் 520-527). மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் இரயிலில் மறுநாள் காலை தஞ்சாவூருக்கு அண்ணலும் அவரது குழுவினரும் வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்திய இரயில் நிலையத்தில் காந்திஜி இறங்கி விடுகிறார் என்பதை
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/17
Appearance