கி.வீரமணி 11 அறிந்த தஞ்சை மக்கள் இன்று ஒரு தந்திரம் செய்தார்கள். மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய இடத்தில் கூடி நின்றார்கள். ஆனால் இம்முறை காந்திஜி அவ்வாறு இறங்கவில்லை. திட்டப்படி தஞ்சாவூர் இரயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொது மக்களுக்கு ஏமாற்றம் தான். தஞ்சையில் காந்திஜி குழுவினர் "உக்கடை ஹவுஸ்"-இல் தங்கியிருந்தார்கள். இந்த நகரில் நடைபெற்ற ஒரு முக்கியமான காரியம் நீதிக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் காந்திஜியும் சந்தித்து பேசியதேயாகும். பன்னீர்செல்வம், உமா மகேசுவரம் பிள்ளை (நீதிக்கட்சித் தலைவர்கள்), உக்கடைத்தேவர், சையத் தாஜுதின், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோருக்கு அண்ணல் பேட்டி அளித்தார் (மற்றும் பாப்பாநாடு ஜமின்தார் கே. நடராஜன் முதலிய பல பிரமுகர்களையும் காந்திஜி சந்தித்துப் பேசினார். கே. நடராஜன் தாயாரான வயதான அம்மையார் காந்திஜியைப் பார்க்க வந்தபோது அண்ணல் அவரை அன்போடு வரவேற்று, பெண்கள் கட்டிக் கொள்ளத்தக்க மெல்லிய பு. வைகள் கதரில் இருப்பதாகச் சொன்னார். நீதிக்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது இருதரப்பினருக்குமே நல்லதாகப் போயிற்று. காந்திஜியின் தரப்பைக் அவர்களும், அவர்கள் தரப்பை காந்திஜியும் அதிகம் புரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு உதவியது. நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும், உமா மகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல் "சுதேசமித்திரன்" இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும். உயர் மகேசுவரம் பிள்ளை: பிராமணர் பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/18
Appearance