12 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர் பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்து விடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும், என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டில் தாழ்வாரத்தில் தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரைவரை செல்கிறாள் என்று காந்தியார் கூறினார். இந்த வரலாற்றுக் குறிப்பு எதைக் காட்டுகிறது? தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், அவர் ஏற்படுத்திய புரட்சி காந்தியாரின் சுயமரியாதைக்கே கூட உத்தரவாதத்தை அளித்துள்ளதே! சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுவதற்குமுன் ஒரு அய்யங்கார் வீட்டில் பெரிய தலைவரான காந்தியாருக்கே இருந்த மரியாதை என்ன? சுயமரியாதை இயக்கப் புரட்சிக்குப்பின் காந்தியாருக்கு அளிக்கப்பட்ட மரியாதை என்ன என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/19
Appearance