உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 15 பரிதாபகரமானவர்கள். "இந்த உலகில் நீங்கள் உழலும் துன்பம், நாளை அடுத்த உலகில் நீங்கள் அனுபவிக்கப் போகும் இன்பத்திற்கான அச்சாரம்" என்னும் இடையறாத மூளைச் சாயப் பிரச்சாரத்தை ஏற்றவர்கள். எனவே அவர்களது எதிர்ப்பையும் தந்தை பெரியார் அவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. < அவர் போன்று சமூகப் புரட்சிச் சிந்தனைக்கு தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தயாரான வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்கூட, "கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக" என்று கூறிச், சாதி,மத, சாத்திரக் குப்பைகள் பற்றியெல்லாம் பேசியும் எழுதியும் பார்த்து, சலித்து, சங்கடப்பட்டு இறுதியில் "கடைவிரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்" என்றார். ஆனால், தந்தை பெரியார் ஓர் பிடிவாதக்காரர்; எடுத்த செயலை, அவர் தொடுத்த போரை முடிக்காமல் விடமாட்டேன் என்று கூறி எதிர் நீச்சல் அடிப்பதில் இன்பங்கண்டார்! பெரும் அளவில் வெற்றியும் பெற்றார். "வெற்றியா தோல்வியா என்று நாம் இலட்சியப் பயணத்தில் ஒரு பணியில் - கிளர்ச்சியில் இறங்கும்போது அது வெற்றியில் முடியுமா? தோல்வியில் முடியுமா என்று சிந்திப்பதை விட, அது செய்யப்படவேண்டிய ஒன்றா? செய்யப்பட வேண்டாததா? என்று பார்த்து, செய்யப்பட வேண்டிய அவசியமானதுதான் என்றால் பிறகு அதில் உடனே இறங்கியே ஆகவேண்டும். இலட்சியங்கள் என்ற பொருளைப் பெற கஷ்ட நஷ்டங்கள் என்ற விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்" என்றார்! பொது மனித நேயம், மக்கள் ஒருமைப்பாடு, ஒழுக்கத்தினைப் போற்றிப் பாதுகாக்கப் பெருநோக்குச் சிந்தனை கொண்ட பெரியார் ஏன் கடவுள் மத மறுப்பு போன்ற கடுமையான பிரச்சாரத்தில், கிளர்ச்சியில் இறங்கினார்? என்ற கேள்விக்கு ஒரு அற்புதமான தத்துவத்தை, விளக்கத்தை அய்யா அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தரத் தவறவில்லை.