14 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஆனால் அதையும் தாண்டித் தந்தை பெரியார்தம் சமூகப் புரட்சிக் கொள்கைகள் வடபுலத்திலும் மய்யம் கொள்ளுவது தவிர்க்க இயலாத காலத்தின் கட்டாயமாகிவிட்டது! ஒரு இனத்திற்கு அடையாளம் காட்ட அவர்கள் முனைந்ததே தனி மனிதனின் சுயமரியாதையை உயர்த்திடவே. பிறவியினால் ஏன் ஏன் பேதம் பேதம் இழிவு உயர்வு தாழ்வு காட்டப்படவேண்டும்? நாயைவிட, பன்றியைவிட, மலத்தைவிடக் கேவலமாகவா ஆறறிவு படைத்த மனிதன் நடத்தப்படுவது? - அதற்குள்ள மூலகாரணம் என்ன? என்று அவர் ஆராய்ந்தபோது, ஒரு சுகாதாரத்துறை - மருத்துவராகவே காட்சி அளித்து (Health Dept. Doctor) பிறகு, சமூக நோய்த் தடுப்பைப் பற்றிக் கூறிடும் நிலையில், சமூக நோய் ஒழிப்பிற்கான (Medical Dept. Doctor) மருத்துவர் என அவரது சமூகப் புரட்சி அமைந்தது! - எப்படி ஒருவர் தாழ்ந்த பிறவி, மனிதருள் ஏன் மற்றொருவர் உயர்ந்த பிறவி? மனிதனின் பிறவியில் ஆண் உயர்வு, பெண் தாழ்வு என பிறவி பேதம் ஏன்? என்று அவரிடம் பொங்கி வழிந்த மனிதாபிமானம் (Humanism) கேள்வி கேட்டது. அவர் ஓர் சுய சிந்தனையாளர் ஆனபடியால் எந்த மன ஒதுக்கீடும் (Mental reservation) இன்றி ஆசாபாசத்திற்கும் இடந்தராது விடைகாண முயன்றார்! இந்தப் புதிய புத்தனின் "போதிமரம்” - மக்கள் கூட்டமே! அவர்களின் அவதியும் அவமானமும் அடிமைத்தனமும் தான். அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அவரது 'தவமானது; விடியல் உருவாக்கச் சமூக விடுதலை தேவை என்று முழங்கினார்! ஆனால் அவர் எந்த மக்களிடையே தொண்டாற்றினாரோ அவர்கள் அடிமை விலங்கை அணிமணியாகக் கருதி, சுமையைச் சுகமாக எண்ணி, ஏமாந்து, இந்த உலகத்தின் சுமை அடுத்த உலகத்தின் (மோட்சம்) சுகம் என்று நம்ப வைக்கப்பட்ட
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/21
Appearance