உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி கலந்துவிட்டதா? பிரிக்க முடியாது கலந்துவிட்டதா? அல்லது "அறிவு", "கல்வி”, “தகுதி”, “திறமை" கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது? ரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போக போக்கியன், உரிமைக்காக கலக்க வேண்டாமா? சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய கருப்பு திராவிட ரத்தக் கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும், நமக்கும், அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது? அவர்கள் தனி சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வுக்கு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்து கருப்பு திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ("குடிஅரசு”, 14,7,1945) பண்பாட்டு அடிப்படையில் உள்ள வேறுபாட்டைத் தான் தந்தை பெரியார் சுட்டிக் காட்டுகிறாரே தவிர மற்றபடி வேறொரு இன அழிப்பு என்கிற சிந்தனை அவர் கருத்தில் கிடையாது. அவரது வாழ்நாளில் அதைச் செய்ததுமில்லை!