1. 4.பண்பாட்டுப் புரட்சியில் பெரியார் பெற்ற வெற்றிகள் சில எடுத்துக்காட்டுகள் 1924-இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, திருவாங்கூர் ராஜ்யமான கேரளத்தில் வைக்கம் என்ற ஊரில், கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் உள்ளதால், அவ்வீதிகளில், கீழ் ஜாதியான ஈழவ தாழ்த்தப்பட்டோர் நடக்க உரிமை இல்லை என்ற சமூக அநீதியை எதிர்த்து, வெடித்துக் கிளம்பியதே 'வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்'. தெருவில் நடக்க மனிதனுக்கு உரிமை வாங்கித் தந்த அந்த சமூக நீதிப் போராட்டம் இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராட்டம் எனக் கூறலாம். அதனை நடத்தியவர்களை அன்றைய மன்னராட்சியும் திவானாக இருந்த ராகவ அய்யங்காரும், கைது செய்து சிறையில் அடைத்து அப்போராட்டத்தினைத் துவக்கத் திலேயே நசுக்கிவிட முனைந்தனர். சிறையில் இருந்துகொண்டு, தமிழ்நாட்டுக்கு, தந்தை பெரியார் அவர்களுக்கு, கேரள காங்கிரஸ் தலைவர் ஜோசப் ஜார்ஜ் அவர்கள் கடிதம் எழுதி சத்தியாகிரகத்தை அவரை முன்னெடுத்து நடத்தக் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று கேரளம் சென்று, பெரியார் முன்னின்று நடத்தி, இருமுறை கைதாகி, வைக்கம் சத்தியாகிரகத்தை பெற்றிபெறச் செய்தார். திரு.வி.க. அய்யா அவர்களுக்கு 'வைக்கம் வீரர்' என்று பட்டம் சூட்டினார். பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு வைக்கத்தில் தந்தை பெரியாருக்குச் சில நினைவுச் சின்னங்களை அமைக்க முடிவு செய்தது. தந்தை பெரியார் சிலை, நூலகம், பூங்கா ஆகியவை அங்கே
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/26
Appearance