கி.வீரமணி 23 உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு செய்த மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. ஆதிக்க ஜாதியினர் மிகவும் மகிழ்ந்தனர். தந்தை பெரியார் களம் கண்டார் - விழிகளில் குளம் கொண்டோர் சார்பில்! அறப்போராட்டம்! பொது மக்களை ஓரணியில் திரட்டினார். பண்டித நேரு பெருமகனார் பிரதமராக இருந்தார்.டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சர் என்ற நிலையில் இந்திய அரசியல் சட்டத்தின் முதல் சட்டத்திருத்தம் (First Amendment.. to the Constitution of India) கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, வகுப்புரிமை ஆணைக்கு மீண்டும் புத்துயிர் வந்தது! சமூகநீதி வென்றது! இதுபற்றி "As noted earlier, Champakam Dorairajam's case invalidated the Madras reservations in educational institutions and by implication barred all preferential treatment outside the sphere of government employment. The decision caused a political agitation in South India and led to the amendment of Article 15 by adding clause (4). In the debate on Amendment Prime Minister Nehru remarked: "The House knows very well and there is no need for trying to hush it up, that this particular matter in this particular shape arose because of certain happenings in Madras". (Parliamentary Debates Vol XIII - 13 (Part II) at Col. 961.5. The second Backward Classes Report Vo. Il
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/30
Appearance