உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி இதன் தமிழாக்கம்: 15ஆம் "முன்னரே குறிப்பிட்ட வண்ணம், சண்பகம் துரைராஜன் வழக்கு சென்னை மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் செய்வதைச் செல்லாதது என்றாக்கியது. அதன் நிமித்தமாகப் பெறப்படும் முறையில் அரசுப் பணித்துறையில் முன்னுரிமைச் சலுகைகள் காட்டப்படுவது முழுவதும் தடைக்குள்ளாக நேர்ந்தது. அவ்வழக்கு முடிவு தென்னிந்தியாவில் அரசியல் கிளர்ச்சி தோன்றக் காரணமாயிற்று. அதன் விளைவே அரசியல் சட் உறுப்பு 4 ஆம் பிரிவு ஒன்றைக் கூட்டி, சட்டத் திருத்தம் பண்ண வேண்டிய நிலைக்குக் கொண்டு செலுத்தியது. சட்டத் திருத்த விவாதத்தின் போது பிரதமர் நேரு வெளியிட்டதாவது: இந்தக் குறிப்பிட்ட வடிவத்தில் இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு தோன்றியுள்ளமை சென்னையில் நிகழ்ந்த சில குறிப்பிட்ட நடப்புகளினால்தான் என்பதை இந்நாடாளுமன்றம் நன்கறியும். அதை மூடி ஒளித்து வைக்க வேண்டியதில்லை." நாடாளுமன்ற விவாதங்கள் தொகுதி XIIi-13 (பாகம் II)] தந்தை பெரியார் அவர்கள் நிகழ்த்திய சமூகப் புரட்சி - ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்னும் அடிப்படை உரிமை இதன்மூலம் நிரந்தரமாகப் பெற்ற மிகப்பெரிய வெற்றி அல்லவா? இதுபோலவே. மாநில அரசிடம் மட்டும் இருந்த இந்த ஒதுக்கீட்டுச் சமூகநீதி வாய்ப்புக்கள், மத்திய அரசின்கீழ் இயங்கும் அனைத்து அரசு, மற்றும் பொது நிறுவனங்களிலும் கிடைப்பதற்கு தொடர்ந்து பெரியார் மறைவுக்குப் பின்னரும் அவர் தொடுத்த வகுப்புரிமைப் போர் தொய்வின்றி தொடர்ந்தது - தொய்வின்றி அவரது தொண்டர்களால்! 42 மாநாடுகளும், 16 போராட்டங்களும் நடத்தப்பட்டன. அது 1980-இல் மண்டல் பரிந்துரையாக மலர்ந்தது; அப்பரிந்துரைகள் 1992-இல் காய்த்து, கனிந்தன. சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமரான நிலையில் 1990-இல்