உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 25 அந்த மத்திய அரசின் ஆணையாக வந்தபோது, அவர் நாடாளுமன்றத்தில் சமூகப்புரட்சியாளர்களது தொண்டி னைப் பாராட்டி நன்றியுடன் நினைவுகூர்ந்து, நாடாளுமன்ற ஏடுகளில் பதியவைத்தார். அது நாடாளுமன்ற ஏடுகளில் பதிந்தது என்பது ஒருபுறம் நமக்கு மகிழ்ச்சி அளித்தது என்றாலும், மண்டல் பரிந்துரைபற்றிய 9 நீதிபதிகளைக் கொண்ட 'பெஞ்ச்' தீர்ப்பு வழங்கியபோது அதில் தனித் தீர்ப்பு தந்த ஜஸ்டீஸ் திரு.எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள், பிரதமர் வி.பி. சிங் நாடாளுமன்றத்தில் பேசிய அதே வரிகளை தனது தீர்ப்பிலேயே எடுத்துக் கையாண்டு, உச்ச நீதிமன்ற வரலாற்று ஆவணத்திலும் பெரியாரின் சமூகப் புரட்சி பதியப் பெற்றது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது! உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் திரு. எஸ். ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் இந்திரா சகானி Vs இந்திய யூனியன் வழக்கில் (மண்டல் கமிஷன் 19வது பாராவில்) அந்த வைரவரிகள் இதோ: "Recognizing and recalling the self-less and dedicated social service carried on by those great leaders from their birth to the last breath, the then Prime Minister while making his clarificatory statement regarding the implementation of the Mandal Commission's report in the Rajya Sabha on the 9th August 1990 paid the tributes in the following words: “In fact this is the realisation of the dream of BHARAT RATNA Dr. B.R. Ambedkar, of the great PERIYAR RAMASWAMY and Dr. Ram Manohar Lohia. இதன் தமிழாக்கம்: அந்த மாபெருந் தலைவர்கள் தங்களின் பிறப்பிலிருந்து இறுதி மூச்சுவரை தன்னலம் துறந்து சமுதாயத் தொண்டறத்தில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு உழைத்தமையை நினைவு கூர்ந்தும் அங்கீகாரம் செய்தும் அன்றைய பிரதமர் 1990 ஆகஸ்ட்