உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி 9 அன்று ராஜ்யசபாவில் விளக்க அறிக்கை ஒன்றை நிகழ்த்தும் வேளையில் மண்டல் ஆணைய அறிக்கையை நடப்புச்சூழல் பற்றிய கீழ்வரும் சொற்களில் புகழுரையாகப் பேசினார்: "மெய்யாகவே, பாரக ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், தலைசிறந்த பெரியார். இராமசாமி, டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகியோரின் கனவின் நனவாக்கமே இது!" தந்தை பெரியார் வலியுறுத்திய சமூகநீதிக் கொள்கை இன்றைக்கு இந்தியாவின் கொள்கையாகிவிட்டது. சமூகநீதி என்னும் இட ஒதுக்கீடு என்பது வெறும் கல்வி, உத்தியோக சம்பந்தப்பட்டது மட்டுமன்று; இந்த இரண்டும் இல்லாமல் ஆக்கப்பட்டதால் கண்ணிருந்தும் குருடனானவனுக்குப் பார்வை கொடுப்பது. நீ மண்ணல்ல - மனிதன் என்கிற வெளிச்சத்தைக் கொடுப்பதாகும். கல்வியும் உத்தியோகமும் ஒருவனின் சமூகத் தகுதியை உயர்த்தக்கூடியது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிர்வாகத்திலும் ஆட்சி அமைப்பிலும் உரிய பங்கை அளிப்பதாகும். தகுதி போய்விடும் திறமை அழிந்துவிடும் என்று குறுக்குச்சால் ஓட்டிப் பார்த்தார்கள் - நீதிமன்றம் சென்று பார்த்தார்கள். கடைசியில் அவர்களே எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று மண்டிபோட்டு மனுபோடும் நிலையை உருவாக்கினார் தந்தை பெரியார். சமூகநீதியைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார் சொல்லும் கருத்து இதுதான். "ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்கவேண்டும் என்று கருதி ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு குணமாக இருக்குமோ அதுபோலத்தான் எனக்குத் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களின் - உடல்நிலையில் இளைத்துப்போய் வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு