முனைவர் சா. கிருட்டினமூர்த்தி இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை-600 113 அணிந்துரை செயற்கரிய செய்வார் பெரியர்' என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார். சாதி, மத, இனச் சாக்கடையில் சிக்கித் தத்தளித்துக்கொண்டிருந்த தமிழ் மக்களிடையே தன்மான உணர்வை ஊட்டி விழித்தெழச் செய்தவர் பெரியார் ஆவார். பிறரால் செய்ய இயலாத அரிய செயலைச் செய்து இந்தச் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்த அவர் மேற்கொண்ட பணியைப் பற்றி, "பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத் தொண்டுக்குத் தகுதியுடையவன் என்று கருதுகிறேன்" என்று அவரே கூறுவதால் தன்னுடைய தொண்டு எத்தன்மையது என்பதையும், தான் செய்த அனைத்துச் செயல்களும் இச்சமுதாயத்தை நோக்கியன என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருப்பதை இதன் வழி அறியலாம். பெரியார் என்ற ஒரு மாமனிதர் தமிழக மக்களுக்காக உழைக்கப் பிறந்திருக்கவில்லையெனில் இத்தமிழக மக்கள் இன்று எந்நிலையில் இருப்பர் என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சமுதாய மாற்றத்திற்காகப் பெரியார் அவர்கள் ஆற்றிய தொண்டு என்பது அவர் சிந்தனையின் ஆழத்தில் எழுந்ததாகும். தாம் சிந்தித்தால் மட்டும் போதாது; தம்முடைய மக்களையும் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாகச் செயல்பட்டார். எந்த ஒரு புரட்சியும் முதலில் தனி மனித உள்ளத்தில் தோன்றும் சிந்தனையாகத்தான் அமையவேண்டும் என்று கூறுவார் எமர்சன். எனவேதான், தனி மனிதனாகிய தன்னைப் பற்றியும், தான் இருக்கும் நிலை பற்றியும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்ததோடு தன்மான உணர்வு தமிழனுக்கு வேண்டும் என்பதைத் தந்தை பெரியார் வலியுறுத்திக் கூறினார். பண்பாட்டுச் சீர்கேட்டாலும் சாதி உணர்வாலும் தமிழினம் சிதறுண்டு நிற்பதை எடுத்துக்காட்டித் 'தமிழர் ஓர் இனம்' என்பதை உணர்த்துவதில் தீவிரம் காட்டினார். மூட நம்பிக்கைகள் மனித சிந்தனையை
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/4
Appearance