உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழுங்கச் செய்யும் என்பதால் அம் மூட நம்பிக்கைகளுக்கும். போலிச் சடங்குகளுக்கும் எவரும் ஆளாகக்கூடாது என்பதை வலியுறுத்தினார். உண்மையிலேயே சமுதாய மேம்பாட்டுக்காகப் புரட்சி விதைகளைத் தமிழ் மண்ணில் விதைத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும். பகுத்தறிவு நோக்கம் கொண்ட உலக அறிஞர்கள் பலரும் அவருடைய கொள்கைகளில் ஆர்வம் காட்டியும், ஆய்வு செய்தும் வருகின்றனர். இத்தகு பெரியாரின் பெயரால் இந்நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவாக இச்சொற்பொழிவு அமைகிறது. பெரியாரின் வழித் தோன்றலாகிய விடுதலை இதழின் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 'பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி* என்ற தலைப்பில் இச்சொற்பொழிவை நிகழ்த்துவது பெருமைக்குரிய ஒன்றாகும். இச்சொற்பொழிவு நடைபெறும் நாளிலேயே இச்சொற்பொழிலை நூலாக வெளிக்கொணர்வதில் இந்நிறுவனம் பெருமையடைகிறது. இவ்வறக்கட்டளையை நிறுவிய பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் முனைவர் ந. வேலுசாமி அவர்களுக்கு இந்நிறுவனத்தின் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு கல்வியமைச்சர் முனைவர் மு. தம்பிதுரை அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி பண்பாடு- மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர் திருமிகு பு.ஏ. இராமையா, இ.ஆ.ப. அவர்களுக்கும்.. கூடுதல் செயலாளர் திருமிகு தா. சந்திரசேகரன் இ.ஆ.ப., அவர்களுக்கும் என் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொள்கிறேன். இந்நூலுக்கு மெய்ப்புத்திருத்தம் செய்த முனைவர் மு.வளர்மதி ஆய்வு உதவியாளர், அயல்நாட்டுத் தமிழர் புலம் அவர்களுக்கும் இந்நூலினை அழகுற அச்சிட்டுத்தந்த யுனைடெட் பைண்டிங் கிராபிக்ஸ் அச்சகத்தார்க்கும் நன்றி. சென்னை 05-11-2002 இயக்குநர்