ஆசிரியரைப் பற்றி 1933 டிசம்பர் 2 ஆம் நாள் தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் பிறந்தார். தந்தையார் பெயர் திரு. சி.எஸ். கிருஷ்ணசாமி. இவர் 9 மாதக் குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்தார். அதனால் சிற்றன்னை திரு பட்டம்மாள் இவரை வளர்த்தார். இவர் 10 வயதிலேயே தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடைகளில் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 11வது வயது முதலே திராவிடர் கழக மாநாடுகளில் உரையாற்றிப் பெரும் பாராட்டைப் பெற்றார். எம்.ஏ. வகுப்பில் (1956) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். 1961 ஆம் ஆண்டில் சட்டக் கல்வி முடித்துக் கடலூரில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழக ஏடுகளான 'விடுதலை', 'உண்மை,' Thc Modern Rationalist' ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து வருகிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு. சமூக நீதி, மொழி இனப் பாதுகாப்பு, ஈழத்தமிழரின் போராட்டம், மனித உரிமை, பெண்ணுரிமை தொடர்பாகத் திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள், மறியல்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு தளபதியாகச் செயல்பட்ட இவர் 38 முறை கைதாகிச் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பிறகு 1978 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வருகிறார். 1983 இல் சென்னையில் பெரியார் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். 1988 இல் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் மகளிர்க்கான பொறியியற் கல்லூரியைத் தொடங்கி வைத்தார். 'இனமானப் பேரொளி', பெரியார் விருது, CIDA-Award of excellence, 'பாரத் ஜோதி' ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மையத்தில் சமூக நீதிக்கான 'வீரமணி விருது' வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இந்த விருதைப் பெற்றவர் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங். தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் பல அயல் நாடுகளுக்குச் சென்று உரையாற்றியுள்ளார். தமிழிலும், ஆங்கிலத்திலும் சுமார் 50 நூல்கள் எழுதியுள்ளார். தமிழருக்குரிய நலன்களைப் பாதுகாப்பதில் தளபதியாகச் செயல்பட்ட இவர் 'தமிழர் தளபதி' என்று அழைக்கப்பட்டார். இன்று 'தமிழர் தலைவர்' சிறப்பிக்கப்படுகிறார். இன்றும் இவருடைய இலட்சியப் பணி தொடருகின்றது. எனச் மு. வளர்மதி
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/6
Appearance