உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 53 'மகாபாரத சூடாமணி' என்னும் நூலில் (ஆசிரியர் சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கட்ராமய்யர் மற்றும் ஆர். விசுவநாதய்யர்) சங்கீதாதி ராக மேள லட்சணம் என்னும் நான்காம் பகுதியில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. வம்சம் நான்கு சட்சமத்திமகாந் தாரம் தாமவை மூன்றும் தேவர்; சுத்தபஞ் சமம்பி துர்க்கள்; சொல்லிய ரிஷபம் தெய்வம்; உத்த ரிஷிக ளாகும்; மவுலி ராக்ஷதர் நிஷாதம்; எத்தலத் தோறும் சொல்லு மிலக்கணம் ஈதா மன்றே. (இ-ள்). சட்சம், மத்திமம்,காந்தாரம் இம்மூன்றும் தேவர்; பஞ்சமம் பிதுரர்; ரிஷபம், தைவதம் ரிஷிகள்; நிஷாதம் இராக்ஷதர் வம்சங்களாம் (எ-று). மவுலிராக்ஷதர் - கிரீடம் தரித்த அரக்கர். ஜாதி நான்கு அந்தணன் சட்சமத் திமமான பஞ்சமே சாதி; தந்ததைவ முந்தானே ரிஷபஞ் சத்திரிய னாகும்; முந்துகாந் தாரநிஷாத மொழிந்திடில் வைசிய னாகும்; சிந்தைசே ரந்தரகா கலிகள் சூத்திர னாமே. (இ-ள்). சட்சம், மத்திமம், பஞ்சமம் இம்மூன்றும் பிராமண ஜாதி. தைவதம்,ரிஷபம் இவ்விரண்டும் க்ஷத்திரிய ஜாதி. காந்தாரம், நிஷாதம் இவ்விரண்டும் வைசிய ஜாதி. அந்தரகாகலி ஸ்வரங்கள், சூத்திர ஜாதியாகும் (எ-று). இப்படி இசையில்கூட வருணை வேறுபாடு சாதி வேறுபாடு புகுத்தப்பட்டுள்ளது என்றால், தன்மானமுள்ள யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இதில் மொழி பிரச்சினை மட்டுமல்ல; இழிவுப் பிரச்சினையும் புகுந்து கொண்டிருக்கிறது என்கிறபோது தந்தை பெரியாருக்கு கோபம் ஏற்பட்டதில் எள் மூக்கு முனையளவும் தவறுகாண முடியுமா? சாதி