9. பெண்ணுரிமை சகாப்தம்! ஆரிய மனுதர்ம அமைப்புப்படி பெண்கள் ஒரு ஜீவனேயல்ல. ஆணின் ஒரு உடைமையே யாகும். பால்யத்தில் தந்தையின் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும் கணவன் இறந்தபிறகு பிள்ளைகளின் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதுதான் மனுதர்ம சாத்திரம். (மனு தர்மம் அத்தியாயம் 5 - சுலோகம் 148) இந்நிலையைக் கண்டு தந்தை பெரியார் கொதித்தெழுந்தார். பெண் விடுதலையை முழுமுதற் கொள்கையாகக் கொண்டு போராடினார். "பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது." ('குடிஅரசு' 16.6.1935) என்று கவலைப்பட்டார் பெரியார். கவலைப்பட்டதோடு முடங்கிவிடவில்லை. களத்தில் இறங்கினார் கருத்துப் பிரச்சாரம் செய்தார் - போராடினார் கடைசியில் பெரு வெற்றியும் பெற்றார். 1925-இல் அவரால் துவக்கப்பட்ட 'குடிஅரசு' இதழில் கருத்துப் புரட்சியை ஊட்டினார். 1929 முதல் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பெண் தீர்மானங்களை நிறைவேற்றினார். விடுதலை சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தி ஆணுக்குப் பெண் சமம் என்றார். பெண்களுக்கு என்ன
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/61
Appearance