உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி இந்தச் சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில்கூட அரசுகள் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன என்பது சாதார ணமானதா? கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் அளிக்கப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார் தந்தை பெரியார். இன்றைக்குச் சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் கிடைக்கவேண்டும் என்கிற நிலை எட்டப்பட்டுள்ளது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பெண்கள் சகல துறைகளிலும் விழிப்புப் பெறுவதற்கும், விடுதலை எய்துவதற்கும், உரிமைகளை எட்டிப் பிடிப்பதற்கும் தந்தை பெரியார் அவர்கள் அயராது பாடுபட்ட காரணத்தால்தான் “பெரியார்” என்ற பட்டத்தை பெண்களே மாநாடு கூட்டிச் சூட்டினார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்துரிமை, விதவைப் பெண்ணுக்குத் திருமண உரிமை, கல்வி உரிமை, உத்தியோக உரிமை, வாரிசு உரிமை ஆகிய இவையெல்லாம் இன்றைக்குக் கிட்டியுள்ளன என்றால் இவற்றுக்கான விதையும், அடி உரமும், காவலும் தந்தை பெரியார்தான். 13.11.1938 அன்று சென்னையில் நிகழ்ந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்: "இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய இயலாமற்போன வேலைகளை நம் மாபெருந் தலைவர் ஈ.வெ.ரா. செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாததாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்க வேண்டும் என்பதாகும்." உலகிலேயே பெரியார் என்றால் அது ஈ.வெ. ராமசாமி அவர்களையே குறிக்கும் என்பது தனித் தன்மையான ஒன்றாகும்.