கி.வீரமணி 57 மக்கள் தொகைப் பெருக்கம் என்பது பற்றி யாரும் கனவு காணாத காலத்திலேயே கருத்துக் கணித்தார் தந்தை பெரியார். மற்றவர்கள் இதனை நோக்கும் பார்வைக்கும் தந்தை பெரியார் கண்ணோட்டத்துக்கும் அடிப் படையிலேயே வேறுபாடு உண்டு. "மற்றவர்கள் பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும் குடும்பச் சொத்துக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத் தடை அவசியம் என்று கூறுகின்றார்கள். பெண்கள் விடுதலை அடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகிறோம்" ('குடிஅரசு' 6.4.1930) என்கிறார் பெண்ணுரிமைக் காவலராம் தந்தை பெரியார். மக்கள் தொகைக் கட்டுப்பாடு பற்றி இன்றைக்கு உலகமே பேசுகிறது. மக்கள் தொகைப் பிரச்சினையில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த உலகக் கம்யூனிஸ்டுகள்கூட இன்று தந்தை பெரியார் கருத்தை எதிரொலிக்கும் நிலையை அடைந்துள்ளனர் என்பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். தந்தை பெரியாரின் கருத்துப் பிரச்சாரத்தால் தமிழ்நாடு இத்துறையில் பெரும் பலன் அடைந்தது என்பதை 'தி. வீக்' ஆங்கில இதழ் (22.33992) படம் பிடித்தது. 1920-களிலேயே தந்தை பெரியார் இந்தத் திசையில் ஆற்றிய தொண்டை ஆங்கில ஏடு எடுத்துக் காட்டியுள்ளது. The State had in fact benefited from an awareness movement set in motion by the social reformer Periyar E.V. Ramasamy Naicker in the Mids - 20s தந்தை பெரியாரின் சிந்தனை வேகம் யாராலும் கட்டுப்படுத்தப்பட முடியாதது - திருமணமே கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்குக் கூட அவர் சென்றார் ('விடுதலை' 16.3.1970) "திருமணமே செய்யாத சர்வ சுதந்திர வாழ்வே பெண்ணடிமையை ஒழிப்பதற்கு இறுதிவழி. சுயமரியாதைத்
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/64
Appearance