உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருமணத்தைக் கூட விரும்பாத காலம் ஒன்று வரும்" ('விடுதலை' 14.12.1970) என்று கூறியது கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உண்டு. அன்மையிலே அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தந்தை பெரியாரின் தொலைநோக்குக்கு அங்கீகாரத்தை அளித்துள்ளது. பெரியாரின் சிந்தனைக்கு உயர்நீதிமன்றத்தின் அங்கீகாரம்! உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பயல்கத்தாரா என்ற 21 வயது பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தான் திருமணம் செய்யாமலேயே தன் காதலனுடன் சேர்ந்து வாழ அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, "திருமணம் ஆகாமலே ஒரு ஆணோ அல்லது பெண்ணோ - அவர்கள் விருப்பப்பட்டால் சேர்ந்து வாழலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அரசியல் சட்டத்தின் 27-ஆவது சரத்துகளின் கீழ் வழங்கப்படுகிறது" எனத் தீர்ப்புக் கூறினார். வெகு காலத்திற்கு முன்பே தந்தை பெரியார் அவர்களால் கூறப்பட்டு வந்த கருத்துக்கு நீதிமன்றம் கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் இது. வாயிலாகக் இதைத்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்கூட "ஒருத்திக்கும் ஒருவனுக்கும் வாழ்க்கையின் உடன் பாடென்னும் திருமணம் ஒழிய வேண்டும். தெரிந்தவர் கூடி அன்பு புரிவதால் தோன்றும் மக்கள் பொதுமக்கள் ஆதல் வேண்டும். அருந்துதல் உறைதல் எல்லாம் பொதுவென அமைதல் வேண்டும்" என்று பாடினார்.