உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி குழந்தைகளின் நலன்கள்பற்றிய அக்கறையின்மை ஆகியவற்றின் அடிப்படையின் மேல் அமைந்த நிலவுடைமைக் காலத்திய மணமுறை ஒழிக்கப்படுகின்றது. வாழ்க்கைக் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒருவனுக்கு ஒருத்தி, இருபாலர்கட்கும் சமமான உரிமைகள், பெண்கள் - குழந்தைகளின் சட்டப்படியான நலன்களின் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படை மீதமைந்த புதியதொரு திருமண முறை நடைமுறைப்படுத்தப் பெறுகிறது புதிய திருமணச் சட்டத்தில் மணவிலக்கு உரிமை குழந்தைக்கான ஆதரவு உரிமை, சொத்தில் பங்கு பெறும் மரபுரிமை, இல்லத்திலும் பணிமனையிலும் சரிசமமான தகுதி, சொந்த குடிப்பெயர் வைத்துக் கொள்ளும் உரிமை ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன. மாசேதுங் 1949-இல் அறிவித்ததைத் தந்தை பெரியார் 1925-களில் அறிவித்துவிட்டார்.