உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. களம் கண்டபோது...! பண்பாட்டுப் புரட்சியைச் செய்த அவர் அதை நிகழ்த்துகையில், கையாண்டமுறை உள்ளபடியே அணு உலக அதிசயங்களுள் ஒன்று என்றே கூறவேண்டும். புரட்சி என்றால் வன்முறை, நாசங்கள், இரத்த ஆறு ஓடும் என்பது உலக வரலாறு. ஆனால் இவர் செய்ததோ மிகப் பெரிய அறிவுப் புரட்சி. அமைதிப்புரட்சியாக அதை அவர்கள் செய்தார்கள். 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்' ஒன்றை அவர் நடத்திக்காட்டி அதில் வெற்றியும் பெற்றார் தன்னையும் தன் தொண்டர்-தோழர்களையும் வருத்திக் கொண்டு . வரலாறு படைத்தவர் வைக்கம் வீரரான் தந்தைபெரியார் அவர்கள். எதிர் நீச்சல் அவருக்குப் பழக்கமான ஒன்று சொல்லடி மட்டுமல்ல, கல்லடி, சாணியடி, அழுகிய முட்டை வீச்சு, முட்டைக்குள் மலத்தை வைத்து அவர் மீது வீச்சு, செருப்பு வீச்சுகள், 'செருப்புத்தோரண வரவேற்பு' இப்படி மலைமலையாக வந்த எதிர்ப்பைக் கண்டு அவர் பயந்ததில்லை- ஓடி ஒளிந்ததில்லை. எதிர்ப்பைக் கண்டபோது அவர் மேலும், தணலிலிட்ட தங்கம் ஒளி வீசுவது போல முழு ஒளி வீசத் துவங்கியவர். சிறைச்சாலை அவருக்கு மற்றொரு இல்லமாகியது. அடக்குமுறைகள் ஆயிரமாயிரம் வந்த போதிலும் அவர்கள் அச்சப்பட்டு ஒதுங்கியதுமில்லை, அவர் பணியினின்று