உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஓய்ந்ததுமில்லை. இன்முகத்தோடு இன்னலை ஏற்று மகிழ்ந்து இலட்சியப் பயணத்தைச் செய்வதில் அவருக்கு இணை அவரேதான். அரச வாழ்வைத் துறந்த சித்தார்த்தன், மக்களைத் திருத்த அலைந்து புத்தனானது போல், மைனர் இராமசாமி, பெரும் கோடீசுவரன் இராமசாமி, அனைத்தையும் துறந்து பெரியார் ஆனார்! ஆ 22 காடுமேடெல்லாம் சுற்றிச் சுற்றிப் பிரச்சாரம் செய்தார்! பாதையில்லாத ஊருக்கெல்லாம் "ஈரோட்டுப்பாதை' அமைத்தார்! அவர்கள் கிறைவாசம், தண்டனை ஆகியவற்றை அவர்மட்டுமல்லாமல் அவரது குடும்பத்த்வரையும் எப்படி ஏற்கப் பக்குவப்படுத்தினார் என்பதற்கு அவர்தனியே சுயமரியாதை இயக்கம் காணுவதற்கு முன்பாகக் காங்கிரசில் இருந்த காலத்திலேயே நடந்த ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதாக இருக்கும். அன்றைய 'நவ சக்தி' ஏட்டில் வெளிவந்த அந்தச் செய்தி இதுதான். ஸ்ரீமான் நாயக்கர் மனைவியாரின் செய்தி "என் கணவர் ஈ.வி.இராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு (17.9.1924) மறுபடியும் இராஜத்துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத கால்ம் தண்டனை கிடைக்கக்கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாய்ச் சொல்லி என்னிடம் விடைபெற்றுக் புறப்பட்டுவிட்டார். கொண்டு அவர் திரும்பத் திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும் அதற்காக அவருக்கு ஆயுள் வளரவேண்டும் என்றும் கடவுளையும் மகாத்துமா காந்தியையும் பிரார்த்திக்கின்றே