80 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி challenge rose in Tamil country like a whirlwind, spearheaded by an iconoclast who questioned the Vedas and the gods as well. He took apparently extremist positions on some issues, but the fundamental nature of the social revolution he wrought was clear even to its victims. The political perspectives of Tamil Nadu, and with it much to India, were altered with a seeming finality by Ramaswamy Naicker 1879-1973 "ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி யவள் அணிந்திராத அணியாவார் அறிந்திராத அறிவாவார் கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவராவார் கழறவோ அவர் பெயர்தான் இராமசாமி" (புரட்சிக்கவிஞர் - 'குடிஅரசு'க்கு எழுதிய வாழ்த்து) "ஆயிரம் ஆண்டுகள் (Millennium) என்று சொல்லும் வயதான பெண்மகள், இவ்வளவு நீண்ட பெரிய அளவுடைய கலை எல்லையில் பெரியார் போன்ற ஒரு அணிகலத்தைப் பெற்றதில்லை. அணிந்ததும் இல்லை. ஆயிரம் ஆண்டுகளில் எவ்வளவோ பேர் தோன்றினாலும் பெரியாருக்கு ஒப்பானவர்களை அந்தக் காலம் கண்டதில்லை. அதே ஆயிரம் ஆண்டு என்னும் காலமகள் இந்த நீண்ட நெடிய காலமாகிய பேரெல்லையில் இதுவரை அறிந்துகொண்டிராத அறிவாகப் பெரியார் விளங்குகின்றார். பெரியாரைப் போன்ற அறிஞர்கள் ஆயிரம் ஆண்டுகளில் பிறந்ததில்லை! இந்தப் பெரிய (தமிழ்)நாடு ஒவ்வொரு கணமும் இவருடைய தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது!'
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/87
Appearance