கி.வீரமணி 83 பார்க்கும் தன்மைக்கும் தேசத்தொண்டுக்கும் சம்பந்தமேயில்லை என்பது அவரது கொள்கைபோலும்! இது ஒருவகையில் உண்மை என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலே குறிப்பிட்ட ஓட்டைகளை அடைக்கும். வேலையிலே தான் நாய்க்கர் அவர்கள், பலரால் 'பதர்' என்றும் பட்டம் பெற்று மதிக்கப்பட்டு வருகின்றார். எதற்கெடுத்தாலும், “ረ எங்கள் தகப்பனார், எங்கள் பாட்டனார், எங்கள் மூதாதை" என்று அசட்டு நாடகப் பாத்திரத்தைப் போல உளறிக் கொண்டிருந்தால், தமிழர்கள் 'இக்கரை நடந்து அக்கரை' சேர்வது எக்காலம்? தனக்குத்தானே யோசிக்கும் பொறுப்பையும், திறமையையும் தமிழர்களின் உள்ளத்தில் ஓரளவு (அதைப் பெரிய அளவு என்றுகூடச் சொல்லலாம்) தூண்டிய ராமசாமி நாய்க்கரைப் 'பெரியார்' என்று அழைப்பதில் என்ன பிழை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. "மநுநூல் பார்வையைக் கெடுத்துவிட்டது; நன்னூல் பாஷையைக் கெடுத்துவிட்டது" என்று ஒரு நண்பர் சொன்னார். இவை இரண்டுடன் சலிக்காமல் போர்தொடுக்கும் நாய்க்கரை, அந்தி மாலைப்பார்வை கொண்டவர்கள் துவேஷிக்கலாம்; திட்டலாம். ஆனால் நிகழ் காலமும் வருங்காலமும் நாய்க்கருக்குத்தான். இவைகளே பக்கத்துணைகள் என்பதில் சந்தேகம் சிறிதுமில்லை." டாக்டர் கார்த்திகேசு சிவதம்பி பிரபல ஆராய்ச்சியாளரும், தமிழறிஞரும், வரலாற்றுப் பின்னணியோடு கூடிய சிந்தனையாளருமான இலங்கைப் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் 1995-ஆம் ஆண்டு "Understanding the Dravidian Movement; Problems and Perspectives" "திராவிட இயக்கத்தைப் புரிந்து கொள்ளல்- பிரச்சினைகளும் கண்ணோட்டங்களும்" என்ற ஒரு சிறப்பான ஆய்வு நூலின் அறிமுக உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய மதிப்பீடு வருமாறு:-
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/90
Appearance