கி.வீரமணி 85 "இந்து சமூகத்தில் இதுவரை நிலவி வந்த விவாதிக்கத் தயங்கும், பேச்சுத் திறனற்ற நிலையினை மாற்றி, மதசார்பற்றதாகவும், ஜனநாயக நடைமுறைமிக்கதாகவும் ஆக்குவதற்கான போராட்டத்தை மேற்கொண்டமைக்காக ஈவெரா பாராட்டுக்குரியவர். ஜனநாயக நெறிமுறைப் படுத்திய என்னும் இந்த நடைமுறையே சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களை நாகரிகப்படுத்துவதற்கான வழி வகுத்தது. 21 பெரியாரியல் பெற்றியின் தன்மை எத்தகையது என்பது விருப்பு, வெறுப்பற்ற நடுநிலை ஆய்வாளர்களின் கண்ணோட்டமாக இதில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. 'யுனெஸ்கோ மன்றமும் 1970-இல் தந்தை பெரியாருக்கு அவரது அருந்தொண்டிற்காகச் சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தியது; மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் திரிகுணசென் அவர்கள் சென்னை வந்து அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் விருது வழங்கிச் சிறப்பித்தார். அதன் Citation இதோ: அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் வழங்கிய சிறப்புப் பட்டயம் 27.6.1970 PERIYAR, THE PROPHET OF THE NEW AGE The Socrates of Southeast Asia Father of the Social Reform Movement and Arch Enemy of Ignorance, Superstition Meaningless customs and Base Manners
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/92
Appearance